ஏப்.14, நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் பணிபுரியும் பதினைந்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சி தங்கள் பகுதிகளை அடைத்து கொண்டு நோய் தொற்றால் இறந்தவரின் சடலத்தை உற்றார், உறவினர்கள் கூட பெற்றுக் கொள்ள முன் வராத சூழல் நாட்டில் பல இடங்களில் நிலவி வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி கிருமிநாசினிகளை தெளித்து மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காகப் பணியாற்றி வருகின்றனர். அத்தகையப் பணியாளர்களைப் மஜக சார்பில் பாராட்டி கௌரவிக்கும் விதமாக நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் தலைமையில் சால்வை அணிவித்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிடும் நிகழ்வு சமூக விலகலையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடித்து நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக அழைப்பை ஏற்று மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாஸ்கரன், அனைத்து ஜமாத் பிரமுகர்கள் நாசர், தௌஃபிக், புர்கான், ஹலிக்குல் ஜமான், அலாவுதீன் மற்றும் மஜக கிளை செயலாளர் ஷேக் அலி, யாசர், மெய்தீன் ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், மு.ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கிருமி நாசினி தெளிப்பு, கபசுரக்
கொரோனா வைரஸ்
வேதை மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
ஏப்.12, நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த மக்களுக்கு கபசுர குடிநீரை மஜகவினர் விநியோகம் செய்தனர். மேலும், தேவைபடும் நபர்களின் இல்லங்களுக்கும் கொண்டு சென்று விநியோகித்தனர். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இக்குடிநீரை விநியோகம் செய்ததுடன், வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தையும், வெளியே வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் அவசியம் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு செய்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 11.04.2020
கோவை மாநகர கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த மஜகவினர்!!
பொதுமக்கள்_பாராட்டு!! கோவை:ஏப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து கோவை மாநகர பகுதிகளுக்குள் வருகின்ற அனைத்து வாகனங்களுக்கும் மஜக வினர் கிருமி நாசினி தெளித்தனர். மஜக வினரின் இப்பணியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 12.04.2020
பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கொரோனோ வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். நாடும், மக்களும் இத்துயரத்திலிருந்து விரைந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் இதயப்பூர்வமான விருப்பமாகும். அரசியல், சாதி, மதம், இனம், வட்டாரம் என பேதங்களை கடந்து மக்கள் யாவரும் ஒரே மனநிலையில் அணிவகுத்து நிற்கிறார்கள். மக்கள் சோதனையான ஒரு சூழலில் தவிக்கும் போது, நிவாரணம் மற்றும் நிதி உதவிகளில் மத்திய அரசு இறுக்கமான போக்குடன் இருப்பது நல்லதல்ல. ஆலை தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், சினிமா துறை தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள், சிறு கடை ஊழியர்கள், வாடகை வாகன ஓட்டிகள், சுமை தூக்குவோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், கொரியர் போன்ற சேவை பிரிவில் பணியாற்றியோர் என ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு குறைவாக சம்பாதித்த அனைவரும் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர். பசியும், வறுமையும் கெளரவ தற்கொலைகளையும், பட்டினி சாவுகளையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மத்திய அரசு பொறுப்புணர்வுடன் அக்கறை காட்ட வேண்டும். GST உள்ளிட்ட வரிகளை பெருமளவில் சேமித்து வைத்திருக்கும் மத்திய அரசு
ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக உரியமுன் ஏற்பாடுகளில் மாநில அரசு கவனம் செலுத்தவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!
கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக பல இடங்களில் சிக்கி தவிப்பவர்கள் தமிழகத்திற்குள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல , 48 மணி நேரம் போக்குவரத்து தளர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கொரணா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனையில் இருப்பவர்கள், அது இல்லை (நெகட்டிவ்) என தெரிய வந்ததும், அவர்கள் விரைந்தது வீடு திரும்பி, உரிய பின் தொடர் கிசிச்சைகளை வீடுகளிலேயே தனிமையில் தங்கி மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது போல் 19 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்புக்குரியது. அத்துடன் கிரிமிநாசினி, சோப்பு, கையுறை ,முகக் கவசம் ஆகியவற்றையும் தமிழக அரசு வீடு தோறும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும்,இரண்டாம் கட்ட நிவாரணமாக ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவது