ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ரயில் சந்திப்பு அருகில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர செயலாளர் சையத் முகம்மது, மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர்கள் பைசல் இம்ரான், மஹீன் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். #IStandWithFarmers #MJKStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம் 27.09.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
முத்துப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் பங்கேற்பு!
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்ததை ஆதரித்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் அணைத்து விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் மஜக வினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 27.09.2021
பல்லாவரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக போலீசாரின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ஷானவாஸ் தலைமையில் பல்லாவரத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். பொருளாளர் உடன் மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, முகம்மது அஜீஸ், ஷாஜஹான், ECR
மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இரயில் மறியல்..! மஜகவினர் திரளாக பங்கேற்பு..!
ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்து விவிசாய சங்கங்களின் சார்பாக நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில், திரளான மஜக வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் ஷபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா சலீம், அஜ்மல் உசேன், நீடூர் மிஸ்பாஹுதீன், தைக்கால் அசேன் அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக வினர் திரளாக கலந்துக் கொண்டனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம் 27.09.2021
பேராவூரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக விவசாய அணி மாநில செயலாளர் பங்கேற்பு..! திரளானோர் கைது!
ஒன்றிய அரசின் மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இன்று நாடு தழுவியளவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடை வீதிகளில் அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாயிகள் அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், அவர்கள் தலைமையில் மஜக வினர் பேராவூரணி சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_மாவட்டம் 27.09.2021