ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு நிகழ்வாக மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக போலீசாரின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ஷானவாஸ் தலைமையில் பல்லாவரத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
பொருளாளர் உடன் மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, முகம்மது அஜீஸ், ஷாஜஹான், ECR அப்துல் சமது, மாவட்ட அணி நிர்வாகிகள் முஸ்தபா, மன்சூர், பிராங்கிளின், பைசுல்லாஹ், ஜாகிர், நகர செயலாளர்கள், ஷேக்தாவூத், தமீம் அன்சாரி, சாதிக் பாஷா, தமினா உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
#IStandWithFarmers
#MjkStandWithFarmers
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
27.09.2021