நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக அரசு 6 புதிய பாலங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது . 2016-ல் புதிய ஆட்சி அமைந்து 10 மாதத்திற்குள் நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியத்திற்கு கீழ்க்கண்ட 6 இணைப்பு பாலங்கள் கிடைத்ததில் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . இதற்காக அதிமுக அரசுக்கும் , நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் , மாவட்ட அமைச்சர் O.S. மணியன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றனர் . பாலங்கள் பற்றிய விபரம் . 1. முடிகொண்டான் ஆற்றில் கீழசன்னநல்லூர் - காவாளி இணைப்பு பாலம் . 2.வடபாத்தில் கரம்பை - கூறக்களகுடி இணைப்பு பாலம் . 3.புத்தாற்றில் புறாகிராமம்-நாட்டார்மங்களம் இணைப்பு பாலம் . 4.நரமேனி ஆற்றில் சடகோபன்மூளை- கீறங்குடி இணைப்பு பாலம் . 5. ஆழியாற்றில் தென்னமரக்குடி- தாதன்கட்டளை இணைப்பு பாலம் . 6.ஆழியாற்றில் திருநாட்டாந்தோப்பு- திருமாளையம் பொய்கை இணைப்பு பாலம் . தகவல் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 19-03-2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
வேலூர் (மே) குடியாத்தம் ஒன்றியம் காயிதேமில்லத் நகரில் மஜக உறுப்பினர் சேர்க்கை…
வேலூர், மார்ச்.20., நேற்று வேலூர் மே மாவட்ட குடியாத்தம் ஒன்றிய காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த முகாமினை மாவட்ட து செயலாளர் S.M.D.நவாஸ் தொடங்கி வைத்தார்., உடன் மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப் மற்றும் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹ்மத், நகர துணை செயலாளர் N.சலீம், ஒன்றிய பொருளாளர் W.அமீன், ஒன்றிய து.செயலாளர் அம்ஜத் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமானோர் ஆர்வமாக தங்கள் மஜக உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 20.03.2017
முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி! நாகை MLA பங்கேற்பு!
நாகை. மார்ச்.18.,நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழக கைத்தறி துணிநூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த 178 பெண்களுக்கு ரூ.86 லட்சத்து 63 ஆயிரத்து 936 மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 18.03.2017
திவிக தோழர் படுகொலை மஜக கடும் கண்டனம் …
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA விடும் அறிக்கை ) திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் பாரூக் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது . யாருடைய கருத்தையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்வதே நேர்மையான அணுகுமுறையாகும் . மாறாக வன்முறையை கையில் எடுப்பது ஜனநாயக விரோத செயலாகும் . அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , தி வி க தோழர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் . இவ்விசயத்தில் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18-03-2017
மஜகவின் மார்ச்.31 ஆவடி பொதுக்கூட்ட அழைப்பிதழை மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுக்கு வழங்கினர்…
திருவள்ளூர்.மார்ச்.18., மஜகவின் திருவள்ளூர் (மே) மாவட்டம் நடத்தும் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச்.31 அன்று மாலை ஆவடியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தின் அழைப்பிதழை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் L.செய்யது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் மஜக பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும், மாநில பொருளாளர் Ss. ஹாரூன் ரஷீது அவர்களுக்கும் வழங்கினர். இதில் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் உடன் இருந்தார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் மேற்கு மாவட்டம். 18.03.2017