மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் மாலிக் நகர் கிளை மற்றும் நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் மஜக மாவட்ட செயலாளர் பீர் மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முகாமை வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வில் கடையம் ஒன்றிய செயலாளர் முகமது சுலைமான், திவான் பக்கீர் மைதீன், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 30.10.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
கன்னியாகுமரியில் மஜக சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ! பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்!
கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவ மனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரத்திற்கு உட்பட்ட இளங்கடை புனித அந்தோணியார் சமூக நல கூடத்தில் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக இளங்கடை புனித அந்தோணியார் தேவாலய அருட்பணி ஜோஸ் துறை, அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 160க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம் 31.10.2021
சங்கராபுரம் வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து ஆறுதல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் 20,க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, அவர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் பிறகு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மாநில பொருளாளர் அவர்கள் பேசியதாவது, ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் பஜார் வீதியில் வெடிபொருட்கள் வைக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும், மேலும் இந்த பட்டாசு கடையின் உரிமையாளருக்கு பல இடங்களில் குடோன்கள் உள்ளது அவற்றையும் அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் இந்த கடையில் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த கடையில் கேஸ் சிலிண்டர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சிலிண்டர்கள் வெடித்து தான் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து இந்த விபத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்குச்
ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்! நாகை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் மனு அளித்தார்!
உதயை-நாச்சிகுளத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருத்த நாகப்பட்டிணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு M.செல்வராஜ் B.A., M.P, அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். மனுவைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இச்சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் K.முருகையன், மஜக கிளை பொருளாளர் N.சதாம் உசேன், துணை செயலாளர் இம்தியாஸ், மனிநேய கலச்சார பேரவையின் அமீரக பிரதிநிதி முஹம்மது ரசீத், யாஸர் அரபாத், அப்துல் நசீர் ஆகியோர் உடனிருந்தனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம். 26-10-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளராக, M . முஹம்மது பாரூக் NO : 582 , K.V.S நகர் முதல் தெரு, திருவரங்குளம் ( PO ) புதுக்கோட்டை மாவட்டம். அலைபேசி : 77088 97099 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 26.10.2021