நவ.14., மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் 05-யூனிட் இரத்த தானம் செய்தனர். அவசர சிகிச்சை நிகழ்வுகளில் இரத்தம் மிக அவசியம் தேவைப்படுகின்றது, ஆபத்தான நிலையில் உள்ள மனித உயிர்களை காக்கும் கவசமாக இந்த இரத்த கொடை அமைகின்றது இவ்வாறான சேவை அரசியல் பணியில் தொடர்ந்து மஜக மருத்துவ சேவை அணி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 13.11.21
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.. மாவட்ட செயலாளராக 1) அன்சர் பாஷா, நெ.08. ஆப்பிள் கார்டன் பாத்திமா நகர் 2வது வீதி கோவை 641008 அலைபேசி; 9500771155 மாவட்ட பொருளாளராக 2) பைசல் ரஹ்மான் த/பெ;அப்துல் வகாப் S.217 கல்லாமேடு தெற்கு ஹவுசிங் யூனிட் செல்வபுரம் கோவை-641026 அலைபேசி; 9952812209 மாவட்ட துணை செயலாளர்களாக 3) சதாம்உசேன் த/பெ; அக்பர் அலி காவேரி நகர் குனியமுத்தூர் கோவை-641008 அலைபேசி; 9698183930 4) செய்யது இப்ராஹிம் த/பெ; காதர் மைதீன் நெ.169, நாச்சிமுத்து கவுண்டர் வீதி மேட்டூர் போத்தனூர் கோவை -641023 அலைபேசி; 9790511652 5) அபுதாஹீர் த/பெ; அப்துல் சலாம் நெ.72, பாபு நிவாஸ் சாரமேடு கரும்புக்கடை கோவை-641008 அலைபேசி; 9655599600 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 13.11.2021
குமரி மாவட்டம் நாகர் கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! மஜக ஒருங்கிணைப்பில் நடைபெற்றது!
நவ:13., கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சிபிஐ, எம்எல் கட்சி இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பறக்கை விலக்கு சந்திப்பில் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் பிஜூருள் ஹபீஸ் , மாவட்ட துணை செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர இளைஞர் அணி பொருளாளர் வேல்முருகன் , மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம் 13.11.2021
வட சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட மஜகவினர்!
சென்னையில் கடும் மழை காரணமாக 5 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி வட சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முகமது அக்பர், அவர்கள் தலைமையில் திருவிக நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது. இப்பணியில் வட சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் தாங்கல் தாரிக், மாவட்ட துணைச் செயலாளர் ஹனீப்,வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஷீத், பெரம்பூர் பகுதி செயலாளர் ரபிக் முகமது, 72 வது வட்ட செயலாளர் முகமது சேட்டு, 73 வது வட்ட செயலாளர் மஸ்தான், அப்துல்லா, உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 12.11.2021
மார்க்க அறிஞர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் மரணம்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில தலைவர் மரியாதைக்குரிய AEM அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி அறிந்து வருந்துகிறோம்.(இன்னாலில்லாஹி...) அவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர். லால்பேட்டையில் உள்ள பிரபல ஜாமிஆ மன்பவுல் அன்வார் கல்லூரியின் தலைச்சிறந்த பேராசிரியராக அவர் ஆற்றிய பணிகள் சிறப்பானவை. ஆற்றல் மிகு மாணவர்களை உருவாக்கிய அவர், சிறந்த ஆய்வறிஞ்சராகவும் திகழ்ந்தார். அந்த வகையில் நல்லதொரு மார்க்க அறிஞரை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது. தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவரோடு நல்ல நட்பு இருந்தது. அவரது அறிவுரைகள் மறக்க முடியாதவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் ஜமாத்துல் உலமா சபையினர் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது. வல்ல இறைவன் அவரது பிழைகளை மன்னித்து உயரிய சுவர்க்கத்தில் அவரை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 13.11.2021