You are here

மார்க்க அறிஞர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் மரணம்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில தலைவர் மரியாதைக்குரிய AEM அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி அறிந்து வருந்துகிறோம்.(இன்னாலில்லாஹி…)

அவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர்.

லால்பேட்டையில் உள்ள பிரபல ஜாமிஆ மன்பவுல் அன்வார் கல்லூரியின் தலைச்சிறந்த பேராசிரியராக அவர் ஆற்றிய பணிகள் சிறப்பானவை.

ஆற்றல் மிகு மாணவர்களை உருவாக்கிய அவர், சிறந்த ஆய்வறிஞ்சராகவும் திகழ்ந்தார்.

அந்த வகையில் நல்லதொரு மார்க்க அறிஞரை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது.

தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவரோடு நல்ல நட்பு இருந்தது. அவரது அறிவுரைகள் மறக்க முடியாதவை.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் ஜமாத்துல் உலமா சபையினர் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது.

வல்ல இறைவன் அவரது பிழைகளை மன்னித்து உயரிய சுவர்க்கத்தில் அவரை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
13.11.2021

Top