அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!

நவ.14., மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் 05-யூனிட் இரத்த தானம் செய்தனர்.

அவசர சிகிச்சை நிகழ்வுகளில் இரத்தம் மிக அவசியம் தேவைப்படுகின்றது, ஆபத்தான நிலையில் உள்ள மனித உயிர்களை காக்கும் கவசமாக இந்த இரத்த கொடை அமைகின்றது இவ்வாறான சேவை அரசியல் பணியில் தொடர்ந்து மஜக மருத்துவ சேவை அணி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
13.11.21