நாகை.பிப்.28., நாகப்பட்டினம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஐந்து இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடைப்பெற்றது. மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் தமீஜீதீன், நகர பொருளாலர் அஜீசூர் ரஹ்மான், துணை செயலாளர் அப்துல் மஜீது, வார்டு செயலாளர்கள் நாசர், சமீருதீன், இப்ராஹிம், ஜெக்கிரியா மற்றும் நவாஸ், அனஃப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING). நாகை மாவட்டம். 28.02.17
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
திட்டச்சேரியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
#பொதுச்செயலாளர் #தொடங்கி_வைக்கிறார்! மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறுகிறது . இம்முகாமை நாளை காலை 9:30 மணிக்கு நாகை (தெற்கு) மாவட்டம் திட்டச்சேரியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தொடங்கி வைக்கிறார் ... இவண், மஜக தலைமை தகவல் தொழில்நுட்ப அணி (MJK -IT WING)
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாக கூட்டம்…
திண்டுக்கல்.பிப்.25., திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் நிர்வாக கூட்டம் நேற்று 24-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது. இக்கூட்டம் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது ஃபிர்தெஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் நவ்பல், மாவட்ட துணை செயலாளர் முனாப் தீன் முன்ணிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன... மாணவர்களுக்கான கருத்தரங்கம் எதிர்வரும் 12/03/2017 அன்று காலை 10மணிக்கு நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளன. தகவல் : மாணவர் இந்தியா, தகவல் தொழில்நுட்ப அணி. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 25.02.2017
வட சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஜக கொடி ஏற்றுதல் & பெயர் பலகை திறப்பு…
வடசென்னை மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஏழு இடத்தில மஜக கொடி ஏற்றப்பட்டது, மூன்று இடத்தில் பெயர் பலகை திறக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறந்து வைத்தார்கள். அவைத் தலைவர் நாசர் உமரி, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, நாச்சிகுளம் தாஜுத்தீன், மாநில மீனவர் அணிச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் அஜீம், மா. பொருளாளர் தாஹா, மா.து. செயலாளர் அன்வர் , பகுதி & கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏர்பாடு செய்திருந்தனர். மனிதநேய சொந்தங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.- தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) வட சென்னை மாவட்டம்.
மஜக திண்டுக்கல் நகர இளைஞரணி நிர்வாக கூட்டம்…
திண்டுக்கல்.பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் நகர இளைஞரனி நிர்வாக கூட்டம் நேற்று 23-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட இளைஞரனி செயலாளர் ஷாகித் கான் தலைமையில், மாவட்ட இளைஞரனி துணை தலைவர் அலி முன்ணிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளரா மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன... மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்ணிட்டு திண்டுக்கல் நகரம் முழுவதும் 100க்கும் மேற்ப்பட்ட மரக்கன்று நடுவது என தீர்மானிக்கப் பட்டுள்ளன. நிகழ்ச்சி காலை சரியாக 11:00 மணிக்கு நடைபெறவுல்லதால் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப் படுகின்றது. தகவல் : அனஸ் முஸ்தபா, மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 24.02.17