வேலூர்.மார்ச்.05., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சகோ.கதிர் அஹமத் என்பவர் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப், குடியாத்தம் நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத் முன்னிலையில் மஜகவில் இணைந்தார். நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) வேலூர் (மே) மாவட்டம் 05.03.2017
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
இளையான்குடியில் மஜக மரம் நடும் விழா! பொருளாளர் மற்றும் MP., MLA.,க்கள் பங்கேற்பு!!
சிவகங்கை.மார்ச்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஜகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் தெய்வபுஷ்ப ஊரனிகரையில் 04-03-2017 மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.com., அவர்களும், தோழமை கட்சியான அஇஅதிமுகவின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட செயலாளருமான சகோதரர் #செந்தில்_நாதன் அவர்களும், அஇஅதிமுகவின் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் #மாரியப்பன்_கென்னடி அவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். முன்னதாக பேசிய மாநில பொருளாளர் ஹாருன் ரசீது அவர்கள் தன்னுடைய 43 வயதில் சுத்தம் செய்து பார்த்திடாத ஊரனியை முயற்சி எடுத்து சுத்தம் செய்த தப்பாத்தை சாகுல் அவர்களுக்கும் உதவியாக இருந்து செயல்பட்ட கான்சா உஸ்மான் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இளையான்குடிக்கென்று ஓர் பண்புள்ளதாகவும் அனைத்து விஷயங்களுக்கும் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே மக்களிடம் பொருளாதார உதவியை பெற்றுசெயல்படுவோம். தற்போதும் அதே போல் மக்களிடம் பொருளாதார உதவி பெற்று ஊரனியை சுத்தம் செய்துவிட்டோம். ஊரனியை தூர்வாருவது பேவர்பிளாக் நடைபாதை அமைப்பது
ரியாத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனை கூட்டம்!
ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் பொருளாலர் நிவாஜிதீன், துணைச் செயலாளர்கள் ஹாஜாமைதின், நைனார், சிக்கத்தர், சாதிக் பாஷா, முகம்மது யூசுப்தின், IT WING நிர்வாகிகள் காயல் காதர் சாகிப் (தங்க தம்பி), முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, ஒலாயா, தரயா பகுதிகளில் கிளைகள் துவங்குவது, இலவச குர்ஆன் வழங்குவது, தர்பியா நிகழ்ச்சி நடத்துவது, இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக உம்ரா செல்வதற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இன்று ரியாத் நசியா பகுதியில் கிளை துவங்கப்பட்டது. ரியாத்தில் பணிபுரியும் சகோதரர்கள் IKP-யில் சேர்ந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) ரியாத் மண்டலம்.
தம்மாம் மண்டலம் அல் ஜூபைல் கிளை கூட்டம்…
சவூதி அரேபியா தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட அல் ஜூபைல் மனிதநேய கலாச்சாரப் பேரவை கிளை மாதாந்திர கூட்டம் 03-03-2017 வெள்ளிக்கிழமை கிளை செயலாளர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பொருளாளர் எம்.ஹஜ் முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளையின் துணைச்செயலாளராக ஹஜ் முகம்மது அவர்களை நியமனம் செய்யப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், இரத்தான முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING தம்மாம் மண்டலம்
ஜித்தா மண்டல இஸ்லாமிய கலாச்சரப்பேரவை கூட்டம்
சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தை தொடர்ந்து ஜித்தா மண்டலத்திலும் 03.03.2017 ம.ஜ.க.வின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பிக்கும் வண்ணமாக மண்டல செயலாளர் மஸ்தான் தலைமையில், மண்டல பொருளாலர் அதிரை சேக் முண்ணிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து மாநில துனைபொதுச்செயலாளர் அண்ணண் மைதீன் உலவி அவர்கள் காணொளி மூலம் சிறப்புறை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் ஜித்தா மண்டல ஆலோசராக ஆக்கூர் ரிபாய், மற்றும் மதினா நகரத்தின் அமைப்பாளராக திருமுல்லை வாயில் ஜாபர் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானம்.... 1.இக்கூட்டம் தாயகத்தில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்திற்க்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. 2.வரும் காலங்களில் ஜித்தா மண்டலத்தில் உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக துனைசெயலாளர் பங்குராஜ் அவர்கள் நன்றிவுரை கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.. மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT_WING ஜித்தா மண்டலம்