சிவகங்கை.ஜூலை.15., சிவகங்கை மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்ட சுற்று பயணத்தில் ஒரு நிகழ்வாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் சதாம் உசேன் அவர்கள் முன்னிலையில் இடைக்காட்டூரில் கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் சைஃபுல்லாஹ் அவர்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து அனைத்து சமுதாய மக்களுடனான நட்புனர்வை பேனுவதிலும், அடித்தட்டு மக்களுக்கு உதவிசெய்வதையும், அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுப்பது பற்றியும் நிர்வாகிகளுக்கு எடுத்துக்கூறி அனைத்து சமுதாய மக்களும் ஏன் மஜகவில் இணையவேண்டும் என்பது பற்றி கட்சியின் கொள்கைகளை விளக்கி சிற்றுரையாற்றினார். மேலும் இதில் மாநில வர்த்தகர் அணிதுணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட் அவர்களும் கலந்து கொண்டார். மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்களுக்கும், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் இடைக்காட்டூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் முகம்மது நாசர் அவர்களும், ஜாஹிர் உசேன் அவர்களும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பிறகு நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்வினை கிளை செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களும், கிளை பொருளாளர் செய்யது
புதிய கிளை
மஜக சிவகங்கை இடைக்காட்டூர் புதிய உதயம் மற்றும் கொடியேற்றும் விழா..! மாநில துணை செயலாளர் பங்கேற்பு..!!

மஜக சென்னை துறைமுகம் பகுதி 60வது வார்டு உதயம்…!
சென்னை.ஜுலை.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுக பகுதி 60வது வார்டில் மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் புதிய கிளை உதயமானது. மாநில செயலாளர் என்.ஏ தைமியா, மாநில துணை செயலாளர் பொறியாளர் சைப்புல்லாஹ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட து.செயலாளர் பிர் முஹம்மது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சாஹுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். பிறகு நிர்வாகிகளாக 60 வார்டு செயலாளர் : S.ஜெய்னுல் அஜீஸ் பொருளாளர் : I. தமிமுன் அன்சாரி, துணை செயலாளர்கள்: M. முஹம்மது ஜியாவுதீன்,M.அரபி மஸ்தான், M.முஹம்மது அபுபக்கர் சீத்திக் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கபட்டு மாவட்ட நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 01.07.2018
மஜக வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்! இளைஞர் அணி மாநில செயலாளர் பங்கேற்பு!
வேலூர்.மே.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நேற்று (02.05.2018) மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் #S_G_அப்சர்_சையத் கலந்து கொண்டார். இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து கிழ்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 1. தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்., 2. புதிய கிளைகள் உருவாக்கி அனைத்து தரப்பு பாமர மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல்., 3.வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இது வரை நியமிக்கப்படாத புதிய நகரங்களில் நிர்வாகிகளை நியமித்தல்., 4. நாட்டையும், சமூகத்தையும் வளமான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பெரும்பங்கு இளையோர்களிடம் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட இளைஞர் அணி சார்பாக அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துதல். 5. மாவட்ட இளைஞர் அணி சார்பாக, சுற்றுசூழலை பாதுகாக்க, பசுமையான மிகச் சிறந்த சூழலை உருவாக்க வேலூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடுதல், 6. ரமலான் மாதத்தில் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பாக இஃதியார் நிகழ்ச்சி நடத்துதல் ஆகிய செயல்
வேலூர் மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…!
வேலூர்.ஏப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம், கொணவட்டம் பகுதி 56வது வார்டு கிளை நிர்வாகம் தேர்வு மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கீழ்காணும் நபர்கள் கிளை நிர்வாகிகளாக ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டு தலைமைக்கு பந்துரை செய்யப்பட்டனர். கிளை செயலாளர் : சாதிக் கிளை பொருளாளர் : சிக்கந்தர் கிளை துணை செயலாளர்கள் : இர்பான், தாஜுத்தீன், R.ரபீக். அதன்பின்னர் கொணவட்டம் பகுதியில் உள்ள கொடிகம்பம் புதுப்பிக்கப்பட்டு புதிய கொடி ஏற்றப்பட்டது. கொணவட்டம் பகுதியை சேர்ந்த நிசார், ஆதி பாஷா ஆகியோர் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக மஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன் உடன் இருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம்.