(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்தலைவராக திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தனது இளம் வயது முதல் திமுகவில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் அவருக்கு உரிய நேரத்தில் உரிய அங்கிகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமூகநீதி, மதச்சார்பின்மை, தமிழர் பண்பாடு, திராவிட இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் வளங்களுக்காக அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்பிக்கையிருக்கிறது. அவருக்கும், அவரை தேர்ந்தெடுத்த திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 04.01.2017
செய்திகள்
நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆலோசனை!
நாகப்பட்டிணம் தொகுதியில் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. எதிர்வரும் கோடைக் காலத்தில் நெருக்கடியை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதுகுறித்து முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவானந்தம், நாகை நகராட்சி முன்னாள் சேர்மன் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோருடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, இதுகுறித்து கலெக்டரையும் நேரில் சந்தித்து பேசினார். ஓடாச்சேரி, வாண்டையார் இருப்பு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் ஆழ்துளை குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 02.01.17
நாகை EGS பிள்ளை கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா…
நாகை தொகுதியில் இயங்கி வரும் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரம் பேர் அமரும் கலையரங்கத்தை அமைச்சர் O S மணியன் திறந்து வைத்தார். அதன் மூன்று வாயில்களை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் S. பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். பிறகு மரக் கன்றுகளையும் நட்டனர்.பிறகு EGS பிள்ளை கலைக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாமை தமிமுன் அன்சாரி MLA. திறந்து வைத்தார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 2_01_17
மஜக காஞ்சி தெற்கு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய பொதுக்குழு…
ஜன.07., மஜக காஞ்சி தெற்கு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நேற்று (6.1.2017) மாவட்டச்செயலாளர் யு.ரஹ்மத்துல்லா அவர்கள் தலைமையில் ஏனைய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. கூட்டத்தில் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்ட ஒன்றிய நிர்வாகிகள். ஒன்றிய செயலாளர் - ஜே.பஷீர்: 9940088554. ஒன்றிய பொருளாளர் - ஐ.நாகூர் மீரான்: 9087208870. ஒன்றிய துணைச்செயலாளர்கள்- 1. எஸ்.இப்ராஹிம் கனி : 9940143226. 2.டி.சாகுல் ஹமீது : 9940285311. 3.எஸ்.அபுதாஹிர் : 9884043151. இளைஞரணி செயலாளர் - அந்தோணி டெல்மஸ் : 9486397270. தகவல் : மஜக ஊடகபிரிவு