You are here

திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மஜக வாழ்த்து!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்தலைவராக திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தனது இளம் வயது முதல் திமுகவில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் அவருக்கு உரிய நேரத்தில் உரிய அங்கிகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமூகநீதி, மதச்சார்பின்மை, தமிழர் பண்பாடு, திராவிட இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் வளங்களுக்காக அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்பிக்கையிருக்கிறது.

அவருக்கும், அவரை தேர்ந்தெடுத்த திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
04.01.2017

Top