நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆலோசனை!

நாகப்பட்டிணம் தொகுதியில் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. எதிர்வரும் கோடைக் காலத்தில் நெருக்கடியை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

இதுகுறித்து முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவானந்தம், நாகை நகராட்சி முன்னாள் சேர்மன் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோருடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, இதுகுறித்து கலெக்டரையும் நேரில் சந்தித்து பேசினார்.

ஓடாச்சேரி, வாண்டையார் இருப்பு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் ஆழ்துளை குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
02.01.17