ஜன.21., பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து இன்று 21.1.17 மாலை 4.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பெரியார் திராவிடர் கழகம் இராமகிருட்டிணன், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், அமீர் அப்பாஸ், ரபீக், பாருக் மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாவட்ட செயற்குழு பூ.காஜா, இப்ராஹிம், EBR பகுதி நிர்வாகிகள் ஷாஜகான், காஜா, அப்பாஸ், ஜக்கிரியா உசேன் மற்றும் அனைத்து கிளை கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING), கோவை மாநகர் மாவட்டம் 21_01_17
செய்திகள்
கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மஜக
ஜன.21., இன்று தேனி மேற்கு மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு அர்ப்பாட்டத்திற்கு மஜக அலுவலகத்திலிருந்து திரளாக நமது கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றனர். களத்தில் இருந்த வீரத் தமிழர்கள் அனைவருக்கும் மஜக சார்பாக பிரட் மற்றும் கேக்குகள் தேநீருடன் பரிமாறப்பட்டது ... இதற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது ரியாஸ் தலைமை வகித்தார் மேலும் நகரச் செயலாளர் அயூப்கான், மாவட்ட நிர்வாகிகள் காதர், அனீஸ் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அப்துல் கரீம் , தன்வீர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, தேனி மேற்கு மாவட்டம். 21_01_2017
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் மூலம் சமூக நல்லிணக்கம் !
ஜன.21., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சமூக ஆர்வலர்கள் பொது அறிவிப்பு செய்து ஜல்லிக்கட்டுக்காக போராட அழைப்பு விடுத்ததன் பேரில் (20/1/2017) நேற்று மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவர்களும் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர். எப்போதும் கலவர சூழலில் சிக்குன்டு கிடக்கும் முத்துப்பேட்டையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை நடத்துவதற்கு மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தனது தனிப்பட்ட பேரிலேயே காவல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை ஆய்வாளர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் காலை 10 மணிமுதல் 12 :30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்க முடியும் நீங்கள் ஜும்மா தொழுகைக்கு செல்லுமுன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். ஆனால் சமூக நல்லிணக்கத்தோடு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை கண்ட ஆய்வாளர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் விருப்பத்திற்கேற்ப மாலை 4 மணி வரை அனுமதி வழங்கி ஒத்துழைத்தார். ஆகவே முஸ்லிம்கள் ஜும்மா தொழுகை முடிந்து வந்தும் போராட்டத்தை தொடர்ந்தார்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் முத்துப்பேட்டையில் இதுபோன்ற சமூக நல்லிணக்கம் தொடர்ந்து நீடிக்க
மேலப்பாலையத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாய தொழிற்சங்கம்…
ஜன.20., நெல்லை மேலப்பாலையத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்யக் கோரியும் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பட்டத்தில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் மாவட்ட செயலாளர் நவாப் அலி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.கலீல் ரஹ்மான், மாவட்ட பொருளாலர் எஸ்.சேக் இப்ராகிம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்... தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, நெல்லை கிழக்கு 20_01_17
தீ பரவட்டும்..
ஜன.20., ஜல்லிக்கட்டுக்கு எதிராக மல்லுக்கட்டும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் முன்னெடுக்கும் அறப்போர் அமைதி வழியில் வெல்லட்டும்! மாணவர்_இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் ஆதரவு மேலும் பெருகட்டும்! பெரியார், அண்ணாவின் கனவுகளை வெல்லவும், தமிழ்நாட்டின் உரிமைகள் மலரவும், "மத்தியில் கூட்டாட்சி_மாநிலத்தில் சுயாட்சி" என்ற முழக்கம் ஓங்கவும் இப்போர்களம் வழிகாட்டட்டும்! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! எம் தமிழ் இனத்தின் போராட்டம் வாழ்க!வாழ்க!வாழ்க! இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21_01_16