ஜன.22., வேலூர் மாநகரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சில நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்ட களம் அசுத்தமடைந்ததை தொடர்ந்து மஜக தோழர்கள் களமிறங்கி குப்பைகளை அகற்றினர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT WING) வேலூர் கிழக்கு மாவட்டம் 22.01.2017
செய்திகள்
காஞ்சி வடக்கு மாவட்டம் மாணவர்கள் போராட்டத்தில் மஜக மற்றும் மாணவர் இந்தியா…
ஜன.22., காஞ்சி வடக்கு மாவட்டம் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு உணவுகள் வழங்கியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர்... தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, காஞ்சி வடக்கு. 22_01_17
நாகையில் நடைப்பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநாடு…நாகை MLA பங்கேற்ப்பு!
மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் 7ஆவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பல்வேறு நிகழ்வுகள்…
ஜன.22., மதுரை வடக்கு மாவட்டத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டக்கள் மற்றும் மறியல்களில் மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மதுரை அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உணவு பொட்டலங்கள் குளிர்பானம், தண்ணீர் பாக்கெட் வழங்கப்பட்டது. * மதுரை தமுக்கத்தில் மாணவர்கள் சார்பாக நடைபெறும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி மாவட்ட துணைசெயலாளர் வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் மஜக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டடு உணவு பொட்டலங்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. மற்றும் தமுக்கம் அந்த பகுதியில் துப்புறவு செய்யும் பணிகள் நடைபெற்றது. * உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட மற்றும் ஊர்வலத்தில் மஜக மதுரை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் ஜமாலுதீன் கலந்து கொண்டர். * மதுரை ஒத்தக்கடை பகுதி மக்கள் சார்பாக நடைபெற்ற மறியல் மஜக மாவட்ட துணைசெயலாளர் ஒத்தக்கடை பரூக் தலைமையில் சுலைமான், சிக்கந்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டர்கள். * மலையாைத்தான் பட்டியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சசிகுமார் தலைமையில் மஜக