செய்திகள்
முன்னாள் முதல்வர்… ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்!
மஜக_பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் உருக்கமாக பேசியப்போது அமைச்சர்கள் உட்பட பலரும் கண்ணீர் சிந்தினர்! இன்று தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் செல்வி. டாக்டர் ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவுக்கு மரியாதை செய்யும் வகையில் இரங்கல் தீர்மானத்தை மாண்புமிகு முதல்வர் திரு. அண்ணன் O. பன்னீர் செல்வம் கொண்டு வந்து அவரது சிறப்புகளை பட்டியலிட்டார். மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அண்ணன் திரு. ஸ்டாலின் அவர்கள் அரசியல் நேர்மையோடு சிறப்பாக தனது இரங்கலை பதிவு செய்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். அப்போது அவரது உரை சிறப்பாகவும், உருக்கமாகவும் இருந்தது. முதல்வர மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டோர் அவரையே உற்று நோக்கினர். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் பன்முகத்தன்மையையும், மனிதநேய பணிகளையும் குறிப்பிட்டப்போது அமைச்சர்கள் பலர் விசும்பி அழுதனர். அதிமுக உறுப்பினர்கள் கண்கலங்கி அவையே உணர்ச்சிமயமானது. அவர் உரையை முடித்தப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சோகமயமாகி அவை முழுவதும் நிசப்தம் நிலவியது. சபை முடிந்தபிறகு அமைச்சர்கள் பலரும் கைக்கொடுத்து அவரை கட்டிப்பிடித்தனர். அதிமுக MLA க்கள் ஓடிவந்து எங்களை அழவைத்துவிட்டீர்களே.. என கலங்கினர். எங்களின் வார்த்தைகளையும், வருத்தங்களையும் நீங்கள்
மாணவர்கள் போராட்டம் குறித்து முதல்வரை சந்தித்து முறையிட்டார் : M.தமிமுன் அன்சாரி MLA!
ஜன.23., இன்று சட்டமன்றத்தில் மாலை 5 மணியளவில் நடைப்பெற்ற அமர்வில் ஒருமனதாக ஜல்லிக்கட்டுக்கான சட்டத்திருத்த முன்வடிவு நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் O. பன்னீர் செல்வம் அண்ணன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி சந்தித்து, இச்சட்டத்திருத்ததிற்காக எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறி, வாழ்த்தையும் தெரிவித்தார். பிறகு இன்றைய நிலவரங்கள் குறித்து தமது கவலையை எடுத்து கூறி, தற்போதைய போராட்டத்தை கனிவாகவும், கவனமாகவும் காவல்துறை கையாள அறிவுறுத்துமாறு முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், உலகமே உன்னிப்பாக கவனித்த ஜல்லிகட்டு தொடர்பான சட்டத் திருத்தம் ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பாராட்டியவர், இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், 100 சதவீதம் அவர்கள் இதற்கு உரிமை கொண்டாடலாம் என்றும் கூறினார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மாணவர்களும், இளைஞர்களும் அறவழியில் போராட்டத்தை முடித்து ஜல்லிக்கட்டை எல்லா இடங்களிலும் நடத்திட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிறகு சட்டசபைக்கு வந்த இயக்குனர் கௌதமனிடமும், அவர் தலைமையில் வந்த மாணவர்களிடமும் இதை வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டக்குழு தலைவர் ராஜசேகர் அவர்கள் அங்கு வந்து, மஜக பொதுச்செயலாளர் தமிமுன்
பீட்டா புளுகிராஸ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்! சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அதிரடி பேச்சு!
ஜன.23., இன்று தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஒரே நாளில் இரண்டாவது முறையாக மாலை 5 மணிக்கு கூடியது. அப்போது "2017-ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட முன் வடிவு" ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்க சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை வரவேற்று மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு: மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... மாண்புமிகு முதல்வர் அவர்களே... உங்கள் தலைமையிலான அமைச்சர்களே.. உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். உலகத் தமிழர்கள் எதிர்பார்த்த ஒரு சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்காக அதிமுக அரசை பாராட்டுகிறேன். 5 ஆயிரம் ஆண்டுகால தமிழினத்தின், பாரம்பர்ய பண்பாடுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை டெல்லியில் உள்ள சிலரால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன உரிமை காக்க, மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் இறங்கி போராடினார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் எங்கும் வாழக்கூடிய தமிழர்கள் தங்கள் நாடுகளில் இதற்காக போராடினார்கள். அவர்களின் உணர்வுகளை எல்லாம் புரிந்துக் கொண்டு இன்று இயற்றப்பட்ட சட்ட முன்வடிவை வரவேற்கிறேன். ஜல்லிகட்டு வெவ்வேறு பெயர்களில் உலகின் பல
அமைதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்…
MLA_க்கள்_M.தமிமுன்_அன்சாரி_உ.தனியரசு_கருணாஸ்_வேண்டுக்கள்! ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் முன்னின்று தமிழகத்தில் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க இப்போராட்டத்தை உலகமே வியந்து போற்றியது. தமிழர்களுக்கு இந்தியாவெங்கும் பெரும் மரியாதை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை ஆளுநர் அவர்கள் பிறப்பித்தார்கள். இது தன்னெழுச்சிமிக்க, நேர்மையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இன்று நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அவசரச்சட்டம் குறித்து ஆளுநர் உறுதியளித்து, அதன்பேரில் மாலை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்களை குறிக்கோள் நிறைவேறிய காரணத்தால் போராட்டத்தை கைவிட்டு வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. அவர்கள் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் இதனால் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒருபுறமும், தள்ளுமுள்ளு ஒருபுறமும் நடைபெற்றது வருந்தத்தக்கது. இதில் மிகுந்த நிதானம் கடைபிடித்திருக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில் சென்னையில் சில அவசரக்காரர்கள் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீவைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது கண்டிக்கதாகும். இதற்கு முன்பாக சென்னை, கோவை உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்களை வெளியேற்ற காவல்துறை எடுத்த முயற்சிகள் பொதுமக்களிடம் தவறான எண்ணங்களை உண்டு பண்ணியிருப்பதாகவும், அதுவே பதட்டத்திற்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்போது அமைதியை கட்டிக்காக்க அனைவரும்