முன்னாள் முதல்வர்… ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்!

மஜக_பொதுச்செயலாளர்
#M_தமிமுன்_அன்சாரி_MLA
அவர்கள் உருக்கமாக பேசியப்போது அமைச்சர்கள் உட்பட பலரும் கண்ணீர் சிந்தினர்!

இன்று தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் செல்வி. டாக்டர் ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவுக்கு மரியாதை செய்யும் வகையில் இரங்கல் தீர்மானத்தை மாண்புமிகு முதல்வர்  திரு. அண்ணன்
O. பன்னீர் செல்வம் கொண்டு வந்து அவரது சிறப்புகளை பட்டியலிட்டார்.

மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அண்ணன்
திரு. ஸ்டாலின் அவர்கள் அரசியல் நேர்மையோடு சிறப்பாக தனது இரங்கலை பதிவு செய்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். அப்போது அவரது உரை சிறப்பாகவும், உருக்கமாகவும் இருந்தது. முதல்வர மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டோர் அவரையே உற்று நோக்கினர்.

மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் பன்முகத்தன்மையையும், மனிதநேய பணிகளையும் குறிப்பிட்டப்போது அமைச்சர்கள் பலர் விசும்பி அழுதனர். அதிமுக உறுப்பினர்கள் கண்கலங்கி அவையே உணர்ச்சிமயமானது.

அவர் உரையை முடித்தப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சோகமயமாகி அவை முழுவதும் நிசப்தம் நிலவியது.

சபை முடிந்தபிறகு அமைச்சர்கள் பலரும் கைக்கொடுத்து அவரை கட்டிப்பிடித்தனர். அதிமுக MLA க்கள் ஓடிவந்து எங்களை அழவைத்துவிட்டீர்களே.. என கலங்கினர். எங்களின் வார்த்தைகளையும், வருத்தங்களையும் நீங்கள் மொத்தமாக பேசிவிட்டீர்கள் என்றனர்.

திமுகவின் முன்னணி தலைவர்களும், திமுகவின் இதர MLA க்களும் மிக சிறப்பாகவும், எங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் இரங்கல் உரை இருந்ததாக கூறினர்.

பத்திரிக்கையாளர்கள், சட்டசபை ஊழியர்களும் வழிமறித்து நாகரீகமாகவும், உண்மையான வரலாற்று பதிவாகவும் தங்கள் உரை அமைந்திருந்தது என்று நெகிழ்ச்சியாக கூறினர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING)
24.01.17