மாணவர்கள் போராட்டம் குறித்து முதல்வரை சந்தித்து முறையிட்டார் : M.தமிமுன் அன்சாரி MLA!

ஜன.23., இன்று சட்டமன்றத்தில் மாலை 5 மணியளவில் நடைப்பெற்ற அமர்வில் ஒருமனதாக ஜல்லிக்கட்டுக்கான சட்டத்திருத்த முன்வடிவு நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் O. பன்னீர் செல்வம் அண்ணன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி சந்தித்து, இச்சட்டத்திருத்ததிற்காக எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறி, வாழ்த்தையும் தெரிவித்தார்.

பிறகு இன்றைய நிலவரங்கள் குறித்து தமது கவலையை எடுத்து கூறி, தற்போதைய போராட்டத்தை கனிவாகவும், கவனமாகவும் காவல்துறை கையாள அறிவுறுத்துமாறு முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.

பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், உலகமே உன்னிப்பாக கவனித்த ஜல்லிகட்டு தொடர்பான சட்டத் திருத்தம் ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பாராட்டியவர், இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், 100 சதவீதம் அவர்கள் இதற்கு உரிமை கொண்டாடலாம் என்றும் கூறினார்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மாணவர்களும், இளைஞர்களும் அறவழியில்  போராட்டத்தை முடித்து ஜல்லிக்கட்டை எல்லா இடங்களிலும் நடத்திட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிறகு சட்டசபைக்கு வந்த இயக்குனர் கௌதமனிடமும், அவர் தலைமையில் வந்த மாணவர்களிடமும் இதை வலியுறுத்தினார்.

ஜல்லிக்கட்டு போராட்டக்குழு தலைவர் ராஜசேகர் அவர்கள் அங்கு வந்து,
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியை சந்தித்து தொடர்ந்து ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி கூறினார்.

மேலும் மதுரையில் தாங்கள் நடத்தும் ஜல்லிக்கட்டுக்கு வருகை தரவேண்டும் என்றும் அழைப்பு கொடுத்தார்.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
23-01-17