ஜனவரி 30 தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை "பயங்கரவாத எதிர்ப்பு நாள்" என்ற தலைப்பில் #மாணவர்_இந்தியா ஒருங்கிணைத்த கருத்தரங்கம் 30-01-2017 இன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் மாநில செயலாளர் அசாருத்தீன்.MBA., தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜாவித்.MBA., வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் அப்ஸர் சையத்.MBA., தீர்மானங்களின் மீதான உரையை வழங்க, மஜக மாநில பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி.MLA., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் #சரத்குமார்.Ex.MLA., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் #அருணன், காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் #ஜோதிமணி, மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இறுதியாக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது. MBA., நன்றிகூறினார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, சென்னை. 30.01.17
செய்திகள்
சட்டமன்றத்தில் இன்று : மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை!
மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை! மாணவர் போராட்டத்தை தைப்புரட்சி என்றும் தமிழர்களின் வசந்த காலம் என்றும் வாழ்த்து! சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் ! இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா பின் லேடன் படத்தை காட்டியதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் OPS அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார். இன்று (30/1/2017) சட்டமன்றத்தில் அது குறித்து பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஒஸாமா பின்லேடன் படத்தை மெரினா மாணவர் போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை. சென்னையில் ஒரு சாலையில் சென்ற பைக்கில் அந்த படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப்படத்தைத் தான் அதிகாரிகள் முதல்வரிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றார். மாணவர் போராட்டதிற்க்கும் அந்த படத்திற்க்கும் சம்பந்தமில்லை என்று விளக்கி அவையை பரபரப்பில் ஆழ்த்தினார். உடனே முதல்வர் திரு OPS அவர்கள் எழுந்து அதுகுறித்து விசாரிக்க சொல்லியிருப்பதாகவும், விசாரனை அறிக்கையில் அது தெரிய வரும் என்றும், தான் எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் பதிலளித்தார்.
திகைத்துப்போன மருத்துவக் குழுவினர்- மாணவர் இந்தியா அதிரடி…
ஜன.29., ஈரோடு மேற்கு மாவட்ட "மாணவர் இந்தியா" சார்பாக சத்தியமங்கலத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில மஜக மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் அந்த பகுதி மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்துக் கொண்டு இரத்ததானம் வழங்கினர். மஜக துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு ஃபாருக் சிறப்புரையாற்றினார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்து மருத்துவ குழுவினை திகைப்பில் ஆற்றினர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுகளை வழங்கிய மருத்துவக்குழு தலைவர் தொடர்ந்து இதுபோன்ற சேவை பணிகளை செய்ய வலியுறுத்தினார். இறுதியாக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரை வழங்கினார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, ஈரோடு மேற்கு 29.01.17
காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா!
ஜன.29., காங்கிரஸ் பிரமுகர் சித்திக் மகன் நவாஸ் அவர்களின் திருமண நிகழ்வு சேலத்தில் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி தங்கபாலு, மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு MLA, காங்கிரஸ் பிரமுகர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) சேலம் 29.01.17
AIMIM முன்னாள் மாவட்ட தலைவர் மஜகவில் இணைந்தார்
ஜன.29., அகில இந்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னால் தலைவர் பீர் முகம்மது அவர்கள் 29-01-2017 இன்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகம் வருகைதந்து பொருளாளர் எஸ்.எஸ்.#ஹாரூண்_ரஷீது.Mcom., அவர்கள் முன்னிலையில் தன்னை மஜக வில் இணைத்துக்கொண்டார். அவருடன் முன்னால் மாவட்ட இணை செயலாளர் முகம்மது அலி இசாக் அவர்களும் தன்னை மஜக வில் இணைத்துக்கொண்டார். மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்ட துணை செயலாளர் தமீம் ரோஸ்லான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, மத்திய சென்னை மாவட்டம் 29.01.17