சட்டமன்றத்தில் இன்று : மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை!

மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை!

மாணவர் போராட்டத்தை தைப்புரட்சி என்றும் தமிழர்களின் வசந்த காலம் என்றும் வாழ்த்து!

சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் !

இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா பின் லேடன் படத்தை காட்டியதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் OPS அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார்.

இன்று (30/1/2017) சட்டமன்றத்தில் அது குறித்து பேசிய மஜக பொதுச் செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஒஸாமா
பின்லேடன் படத்தை மெரினா  மாணவர் போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை.  சென்னையில் ஒரு சாலையில் சென்ற பைக்கில்  அந்த படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப்படத்தைத் தான் அதிகாரிகள் முதல்வரிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றார். மாணவர் போராட்டதிற்க்கும் அந்த படத்திற்க்கும் சம்பந்தமில்லை என்று விளக்கி அவையை பரபரப்பில் ஆழ்த்தினார்.

உடனே முதல்வர் திரு OPS அவர்கள் எழுந்து அதுகுறித்து விசாரிக்க  சொல்லியிருப்பதாகவும், விசாரனை அறிக்கையில் அது தெரிய வரும் என்றும், தான் எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் பதிலளித்தார்.

சபை முடிந்ததும் முதல்வரிடமும், அமைச்சர்களிடமும் இதுகுறித்து கூடுதல் விபரங்களை மஜக பொதுச் செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA. எடுத்துக் கூறினார்.

இந்த விசயத்தை உரிய வகையில் தெளிவுப் படுத்தியது நல்ல விசயம் என்றும் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும்  பாராட்டினர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் K.R. ராமசாமி MLA அவர்கள் கைக்கொடுத்து பாராட்டினார்.

ஒரு சர்ச்சையான விஷயம் இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாக பத்திரிக்கையாளர்களும் பாராட்டினர்.

முன்னதாக தனது உரையில் மாணவர்கள் போராட்டத்தை தைப்புரட்சி என்றும், இப்போராட்டம் நடந்த காலத்தில் வாழ்வதற்காக நாம் பெருமை படவேண்டும் என்றும், இது தமிழர்களின் வசந்த காலம் என்றும், போராட்டம் ஒழுக்கத்தோடு நடந்ததாகவும்
M. தமிமுன் அன்சாரி MLA, மாணவர் போராட்டத்தை சிலாகித்து  வாழ்த்தி பேசினார்.

அப்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் அதை வரவேற்று ஆராவரமாக மேஜையை தட்டி வரவேற்றனர்.

(அவரது முழு உரை விரைவில் வெளியிடப்படும்)

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
30.01.17