நெல்லை மாவட்ட மஜக அலுவலகத்திற்கு அம்பை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆவுடையப்பன் வருகை..!


நெல்லை.மார்ச்.13.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் அவர்கள் நெல்லை மாவட்ட மஜக அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாநில துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான A.R.சாகுல் ஹமீது மற்றும் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் ஆகியோரை சந்தித்து மஜக-வின் ஆதரவு கோரினர்.

இச்சந்திப்பின் போது மஜக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மன்சூர் அலி BA.BL.., மாவட்ட கலை இலக்கிய பேரவை அணி செயலாளர் முஹம்மது கனி PM, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் N.அப்பாஸ்,ஹபிபுல்லாஹ் பேட்டை நகர பொருளாளர் அசன்கனி ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
13-03-2021