திமுக கூட்டணி வேட்பாளர் மஜக அலுவலகம் வருகை! துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக் அவர்களை சந்தித்தார்!


பவானி:மார்ச்:14.,

ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி சாகர் சட்டன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.எல். சுந்தரம், அவர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சத்தியமங்கலம் நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்து ஆதரவு நல்கினார்.

அவரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சையது அகமது பாரூக், அவர்கள் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வேட்பாளர் அவர்கள் பேசும்போது மனிதநேய ஜனநாயக கட்சி எங்களுக்கு ஆதரவு அளித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது, கடந்த காலங்களில் உங்களது தேர்தல் பணிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம் ஆகவே உங்களின் ஆதரவால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று மக்கள் நலப் பணியாற்றுவோம் என்று பேசினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் பாபுலால், அணி நிர்வாகிகள். நசீர், முபாரக், மெஸ் பாபு, நகர செயலாளர் சலீம், மற்றும் நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElection2021
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
13.3.2021