திண்டுக்கல்.பிப்.25., திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் நிர்வாக கூட்டம் நேற்று 24-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது. இக்கூட்டம் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது ஃபிர்தெஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் நவ்பல், மாவட்ட துணை செயலாளர் முனாப் தீன் முன்ணிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன... மாணவர்களுக்கான கருத்தரங்கம் எதிர்வரும் 12/03/2017 அன்று காலை 10மணிக்கு நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளன. தகவல் : மாணவர் இந்தியா, தகவல் தொழில்நுட்ப அணி. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 25.02.2017
செய்திகள்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், ஷெல் சமையல் எரிவாயு, நாஃப்தா போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமான ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருக்கும் இடங்களில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்று மொத்தமே 31 இடங்கள் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து நெடுவாசலை மையமாக கொண்டு வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் இப்போதுதான் அதன் அபாயம் அறிந்து, ஆய்வுப் பணிகள் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. மீத்தேன் எடுப்பு போன்றே அபாயகரமான பின் விளைவுகள் இத்திட்டத்தில் இருக்கிறது. 6 ஆயிரம் அடிக்கு ஆழ்துளையிட்டு பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளையிடப்படும். இதன் காரணமாக கடல்நீர் உட்புகுந்து, 21 லட்சம் ஏக்கர் நிலம் பாழாகும். மேலும் நெடுவாசலை சுற்றி 100 கிலோ மீட்டர் வரை வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள். கூடங்குளம் அணுவுலை, மீத்தேன் எடுப்பு, எரிவாயு குழாய் பதிப்பு என தமிழக சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை தமிழக மக்கள்
சிங்கப்பூரில் நூல் அறிமுகம் தமிமுன் அன்சாரி.MLA சிறப்புரை!
சிங்கப்பூர்.பிப்.25., புதிய நிலா இதழின் 21ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'சிறகிருந்தால் போதும்' நூல் வெளியீடு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 05-03-2017 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழூற்று மு.தமிமுன் அன்சாரி.MLA (பொதுச்செயலாளர்.மஜக) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களும் உரை நிகழ்த்துகிறார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) சிங்கப்பூர். 25.02.2017
நாகையில் கருவேலமரங்கள் அகற்றும் பணிகள் தீவிரம்! MLA நேரில் ஆய்வு!
நாகை. பிப்.24., நடப்பு பதினைந்தாவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மஜக பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள், தனது முதல் கன்னிப்பேச்சில் தண்ணீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை முற்றிலுமாக தமிழக அரசு அகற்ற வேண்டுமென்று பேசினார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் கவனத்திற்கும் கொண்டுச் சென்றார். இதனிடையே கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, தமிழகமெங்கும் இதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகை தொகுதியில் இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தினமும் இப்பணிகளின் துரிதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிகிறார். நாகை ECR சாலை அருகில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டார். பொக்லேன் இயந்திர தொழிலாளி ஒருவரை நேரில் அழைத்து பாராட்டி உற்சாகப் படுத்தினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 24/02/2017
வட சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஜக கொடி ஏற்றுதல் & பெயர் பலகை திறப்பு…
வடசென்னை மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஏழு இடத்தில மஜக கொடி ஏற்றப்பட்டது, மூன்று இடத்தில் பெயர் பலகை திறக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறந்து வைத்தார்கள். அவைத் தலைவர் நாசர் உமரி, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, நாச்சிகுளம் தாஜுத்தீன், மாநில மீனவர் அணிச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் அஜீம், மா. பொருளாளர் தாஹா, மா.து. செயலாளர் அன்வர் , பகுதி & கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏர்பாடு செய்திருந்தனர். மனிதநேய சொந்தங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.- தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) வட சென்னை மாவட்டம்.