புதுகை.மார்ச்.02., புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டக்களத்திருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகைதந்து ஆதரவு தெரிவித்தார்கள். அவரை போராட்டக் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் பேசும்போது அவரது கருத்தை வரவேற்று அடிக்கடி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆதரவு குரல் கொடுத்து முழக்கங்கள் எழுப்பினர். இன் நிகழ்வை தொலைக்காட்சிகள் நேரலைலாக ஒளிபரப்பினர். நெடுவாசல் ஊர் முழுக்க மத்திய மோடி அரசிற்கு எதிராக கூக்குரல் எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது. சாரை சாரையாக ஆண்களும் , பெண்களும் மத்திய அரசிற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியபடியே வந்துகொண்டிருக்கின்றனர், வருகை தரும் அனைவரையும் ஊர்மக்கள் சார்பில் ஒரு குழு கைக்கூப்பி வரவேற்த்துக்கொண்டே இருக்கிறது. வருபவர்களுக்கு ஊர் மக்களே சமையல் செய்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிராமம் முழுவதும் எழுச்சியாக இருக்கிறது. தமிழன் என்ற முழக்கமும், மண்ணை காப்போம் என்ற முழக்கமும் எங்கும் எதிரொலிக்கிறது. இப்போராட்ட களத்திற்கு பொதுச் செயலாளருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா,
செய்திகள்
ஆலந்தூரில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க கொடியேற்று நிகழ்வு…
காஞ்சி.மார்ச்.01., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆதம்பாக்கம், மற்றும் ஆலந்தூர்க்குட்பட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடிகளை ஏற்றி உரை நிகழ்த்தினார்கள். திரளான மஜகவின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொடிகளுடன் அணிவகுத்தனர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) காஞ்சி வடக்கு. 01.03.2017
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் வாழ்த்து !
கல்விதான் வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு என்பது உயர்கல்விக்கான நுழைவாயிலாக திகழ்கிறது. லட்சியங்களை நெஞ்சில் சுமந்து வாழ்வில் முன்னேற துடிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கைதான் மாபெரும் வெற்றிகளுக்கு பாதை அமைக்கிறது. எனவே பதற்றமில்லாமல், தெளிவான மனநிலையோடு தேர்வுக்கு செல்லுங்கள். உங்கள் பேனா குனிவது, உங்களின் எதிர்கால தலைநிமிர்வுக்காக என்பதை மனதில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 01.03.17
பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு மஜக பொதுச் செயலாளர் நேரில் வாழ்த்து!
சென்னை.மார்ச்.01., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பேரா. காதர் மொய்தீன் அவர்களை முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு சென்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அவைத்தலைவர் நாசர் உமரீ, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநிலச் துணை செயலாளர் திண்டுக்கல். அன்சாரி, மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் ஆகியோர் உடன் சென்றனர். அங்கு முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, பிறைமேடை பொறுப்பாசிரியர் காயல். மஹபூப் ஆகியோர் அனைவரையும் வரவேற்று அழைத்து சென்றனர். 45 ஆண்டு காலத்திற்கு பிறகு முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பதவி, தமிழகத்தை சேர்ந்த தங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், தங்கள் தலைமையில் அரசியல் சேவைகள் சிறப்பாக தொடர வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி வாழ்த்தினார். அரை மணி நேரம் நடைப்பெற்ற இச்சந்திப்பில், நடப்பு அரசியல், சமூக நிலவரங்கள் குறித்து நல்லெண்ண கருத்து பரிமாற்றம் நடைப்பெற்றது. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) 01.03.17.
மஜக ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்வு…
ஈரோடு.மார்.01., இரண்டாம் ஆண்டில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டம் பூம்புகார் நகர் கிளை மற்றும் கமலா நகர் கிளையில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாபு ஷாகீன் ஷா மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் மாவட்ட பொருலாளர் முகமது அலி ஆகியோர் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். நெறி பவுண்டேஷன் அநாதை இல்லத்திற்கு சென்று மதிய உணவு வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஸ்டீல் நஜிம், பொருலாளர் #ஹாலித்_கான் மாவட்ட இளைஞரணி செயலாளர் #யாசர்_அரபாத் , முன்னாள் மாவட்ட செயலாளர் ஷபீக் ,முஸ்தபா , சாகுல், குளம் ஜாகீர், சம்சுதீன், ஈரோடு எக்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK_IT_WING) ஈரோடு கிழக்கு மாவட்டம் 28.02.2017