நெடுவாசல் போராட்டக்களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி…

image

image

image

image

புதுகை.மார்ச்.02.,  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டக்களத்திருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகைதந்து ஆதரவு தெரிவித்தார்கள்.

அவரை போராட்டக் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் பேசும்போது அவரது கருத்தை வரவேற்று அடிக்கடி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆதரவு குரல் கொடுத்து முழக்கங்கள் எழுப்பினர்.

இன் நிகழ்வை தொலைக்காட்சிகள் நேரலைலாக ஒளிபரப்பினர். நெடுவாசல் ஊர் முழுக்க மத்திய மோடி அரசிற்கு எதிராக கூக்குரல் எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது. சாரை சாரையாக ஆண்களும் , பெண்களும் மத்திய அரசிற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியபடியே வந்துகொண்டிருக்கின்றனர், வருகை தரும் அனைவரையும் ஊர்மக்கள் சார்பில் ஒரு குழு கைக்கூப்பி வரவேற்த்துக்கொண்டே இருக்கிறது. வருபவர்களுக்கு ஊர் மக்களே சமையல் செய்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிராமம் முழுவதும் எழுச்சியாக இருக்கிறது. தமிழன் என்ற முழக்கமும், மண்ணை காப்போம் என்ற முழக்கமும் எங்கும் எதிரொலிக்கிறது.

இப்போராட்ட களத்திற்கு
பொதுச் செயலாளருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி  செயலாளர் கோட்டை ஏ. எம்.ஹாரிஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் துரை முகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது ஜான், அப்துல் ஹமீது, நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் மன்சூர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வல்லம் அஹமது கபீர், மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார் ஆகியோருடன் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்த இளம் தமிழர் கூட்டம் நெடுவாசலை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது.

இறுதியாக ஹைட்ரோ கார்பன் கழிவுகளை ஊர்மக்கள் பொதுச் செயலாளருக்கு காண்பித்தனர். அதில் ஒரு சொட்டு கழிவை எடுத்து தீ வைத்து எரித்து காட்டினர். அப்போது நெருப்பின் வேகமும், நாற்றமும் அனைவரையும் பதற வைத்தது..

இயற்கை வளங்களை காக்கவும், சுற்றுச் சூழலை மீட்கவும் நடைபெறும் போராட்டங்கள் வெல்லட்டும்!

மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
(#MJK_IT_WING)
புதுக்கோட்டை மாவட்டம்.
02-03-2017