You are here

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு மஜக பொதுச் செயலாளர் நேரில் வாழ்த்து!

image

image

சென்னை.மார்ச்.01., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றிருக்கும்
பேரா. காதர் மொய்தீன் அவர்களை முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு சென்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அவருடன் அவைத்தலைவர் நாசர் உமரீ, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநிலச் துணை செயலாளர்
திண்டுக்கல். அன்சாரி, மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் ஆகியோர் உடன் சென்றனர்.

அங்கு முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, பிறைமேடை பொறுப்பாசிரியர் காயல். மஹபூப் ஆகியோர் அனைவரையும் வரவேற்று அழைத்து சென்றனர்.

45 ஆண்டு காலத்திற்கு பிறகு முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பதவி, தமிழகத்தை சேர்ந்த தங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், தங்கள் தலைமையில் அரசியல் சேவைகள் சிறப்பாக தொடர வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி வாழ்த்தினார்.

அரை மணி நேரம் நடைப்பெற்ற இச்சந்திப்பில், நடப்பு அரசியல், சமூக நிலவரங்கள் குறித்து நல்லெண்ண கருத்து பரிமாற்றம் நடைப்பெற்றது.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT WING)
01.03.17.

Top