வேலூர்.ஏப்.15., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொடியேற்றுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கருவேலமரங்கள் அகற்றும் பணி ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் தலைமையில் கிளை செயலாளர் R.T.சலாம் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசிம் அக்ரம்.Bsc அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தும், மரக்கன்றுகளை நட்டும், கருவேலமரம் அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத், ஒன்றிய பொருளாளர் W.அமீன், ஒன்றிய து.செயலாளர்கள் Y.அம்ஜத், M.இம்தியாஸ், A.சாதிக், ஒன்றிய.இ அ.செயலாளர் இம்ரான், நகர துணை செயலாளர்கள், சலீம், மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கவுஸ், நகர ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் மேற்கு மாவட்டம். 15.04.2017
செய்திகள்
நாகை பாக்கம் கோட்டூர் மஜக கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…
நாகை.ஏப்.15, நேற்று 14.04.2017 நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திருமருகல் ஒன்றிய பாக்கம் கோட்டூர் கிளை மஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டூர் ஹசன், கிளை செயலாளர் உஸ்மான், பொருளாளர் இம்ரான் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING 14.04.2017
IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
தம்மாம். ஏப்.14., இன்று இஸ்லாமிய கலாச்சார பேரவை தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மண்டல ஆலோசகர் செய்யது ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார். மண்டல துணைச் செயலாளர் (பொருளாளர் கூடுதல் பொருப்பு) ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மற்றும் மண்டல ஒருகிணைப்பாளர் சகோ.முகம்மது இல்யாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சகோ.உஸ்மான் அலி, அல் கோபார் கிளை துணை செயலாளர் சகோ.இர்பான் அலி, பொருளாளர் சகோ.உமர் முக்தார், துணைச் செயலாளர் சகோ.அப்பாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் இரத்த தானம் பற்றி சிறப்புரையாற்றினர்கள் அதில் கிளை வாரியாக அமீர்களை நியமனம் செய்து பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தனது கருத்தை வலியுறுத்தினார்கள் மண்டல நிர்வாகிகள் அனைவருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைக்கு பிறகு கிளை வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அல் ஹம்துலில்லாஹ்.. அல் கோபார் பொருப்பாளர்கள் விபரம்... சகோ. இர்பான் அலி (அமீர்), சகோ. செய்யது அலி, சகோ. அஜீஸ், சகோ. உமர் முக்தார், சகோ. இஜாஸ், சகோ. ஹலீம் ஆகியோர் நியமனம் செய்யப்பகிட்டனர். தம்மாம் பொறுப்பாளர்கள் விபரம்... சகோ. சாஹிப் (அமீர்), சகோ. சாகுல் ஹமீத் (சேத்தான் நான), சகோ.
கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வுடன் சந்திப்பு…
நாகை.ஏப்.13., சீர்காழி தொகுதில் உட்பட்ட கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் ஊரில் விதி முறைக்கு எதிராக நிலத்தடிநீரை மாசுபடுத்தும் இறால் பண்ணை அமைக்க முயற்சிக்கும் ஆதிக்க சக்திகளின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனே சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசவும் கேட்டுக் கொண்டார்கள். இந்த விசயத்தை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதாகவும் வாக்குறுதி அளித்தார். M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உணர்வு பூர்வமான நடவடிக்கைக்கு ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த மஜக மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், தம்மாம் மண்டல IKP அல் கோபர் கிளை பொருளாளர் உமர் முக்தார், உஸ்மான், நாகை வடக்கு மாவட்ட மஜக செயலாளர் மாலிக் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி.
திட்டச்சேரியில் பள்ளிக்கூட கட்டிடப்பணிகளை தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார் .!
நாகை. ஏப்.13., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி பேரூராட்சியில் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்புகளுக்கான கட்டிடப் பணிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார் . முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்தின் விஸ்தரிப்புக்காக , இயக்கப்படும் குடிநீர் தொட்டியையும் பார்வையிட்டார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 13-04-2017