(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) விலை குறைந்த கையடக்க செயற்கை கோளை தயாரித்து உலக அளவில் இந்தியாவுக்கும் , தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பள்ளப்பட்டியை சேர்ந்த முகம்மது ரிஃபாத் ஷாரூக் என்ற மாணவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஏழைக் குடும்பத்தில் பிறந்து , இளம் வயதில் தந்தையை இழந்து , +2 தேர்வில் வெறும் 750 மதிப்பெண்களே எடுத்துள்ள நிலையில் , இம்மாணவர் நிகழ்த்திய இச்சாதனை பெரும் பாராட்டுக்குரியது . அறிவுக்கும் , மதிப்பெண்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் , அறிவு என்பது வர்க்கம் சார்ந்து வருவதில்லை என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது . அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் உலக அளவில் 8 ஆயிரம் மாணவர்களை சோதித்து இவரை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இச்செய்தியை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் O.S.மணியன் அவர்களுக்கும் , இம்மாணவனுக்கு 10 லட்சம் ரூபாயை ஊக்கப்பரிசாக அறிவித்த முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண்
செய்திகள்
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு கொடுத்த மஜக பொதுச் செயலாளர்…!
சென்னை.ஜூன்.24., நேற்று பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய நீண்டநாள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும்படி சட்டசபை வளாகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அனைவரையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையனிடம் தமிமுன் அன்சாரி அவர்கள் அழைத்து சென்றார்கள். சுமார் 15 நிமிடத்திற்கு சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பிரச்சனைகளை முழுமையாக விளக்கினார்கள். அதை அனைத்தையும் கேட்ட அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து முழுமையாக கண்டறிய ஒரு கமிட்டி அமைப்பதாகவும், அந்த கமிட்டியின் கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். தங்களின் நீண்டகால பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்க்காக பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தெரிவித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டமன்ற வளாகம். #MJK_IT_WING 23.06.2017
மஜக இஃப்தார்..! மஜக தலைவர்களுடன் தனியரசு, கருணாஸ் பங்கேற்பு..!!
சென்னை.ஜூன்.24., நேற்று மத்திய சென்னை மாவட்டம் ஐஸ்ஹவுஸ் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் பக்கேற்பதாக இருந்த விஜயதாரணி MLA அவர்கள் பெரம்பூரில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வர தாமதம் ஆனதால். தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தார். மஜக சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் பிஸ்மி, பீர் முகம்மது உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. மத்திய சென்னை. #MJK_IT_WING 23.06.2017
கோவை மஜக அலுவலகம் திறப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி : மாநில செயலாளர் பங்கேற்பு!
கோவை.ஜூன்.23., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதிக்குட்பட்ட அல் அமீன் காலனி கிளை அலுவலகத்தை மஜக மாநில செயலாளர் சுல்தான் அமீர் திறந்துவைத்து நிர்வாகிகளிடையே நிகழ்கால அரசியலைப் பற்றி உறையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMSஅப்பாஸ், ரபீக், அமீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அல்அமீன் காலனி கிளை நிர்வாகத்தின் சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி. கோவை மாநகர் மாவட்டம் #MJK_IT_WING 23.06.2017
எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு…
சென்னை.ஜூன்.23., இன்று சட்டப்பேரவை நடைபெற்றுக்கொண்டிருந்த போது எதிர்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் சந்தித்தனர். 14ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது குறித்தும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டும் இச்சந்திப்பு நடைபெற்றது. அதேபோல் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் K.P.ராமசாமி , முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர் MLA, ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டப்பேரவை வளாகம். #MJK_IT_WING 23.06.2017