கோவை.நவ.12., இன்று மறுலர்ச்சி தமுமுக கோவை மாவட்ட தலைவர் அபுதாஹீர், மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் பாஷா மற்றும் பூமார்கெட் கிளை தலைவர் அசன் ஆகியோர் மஜக மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைச்செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக் மற்றும் அனைத்து பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்! தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 12/11/2017.
செய்திகள்
மஜக கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்!
கோவை.நவ.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், அவர்களும் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக் ஆகியோர் டிசம்பர்-6 நீதிக்கான போராட்டம் சம்பந்தமாக எழுச்சி உரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜமேஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர். அணியின் நிர்வாகிகள் அக்பர், அன்சர், சுதீர் மற்றும் பகுதி நிர்வாகிகள் சமீர், ஜாபர் அலி, ஜமால், காஜா மற்றும் துணை நிர்வாகிகள் மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர்-6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை வீரியமான முறையில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 12.11.17
புளியங்குடியில் மஜக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!
நெல்லை.நவ.12., நெல்லை மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதிவேண்டி தென்காசியில் நடைபெறும் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 12-11-2017 மாலை புளியங்குடியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் I.மீரான் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் புளியங்குடி S.செய்யது அலி அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். இதில் #டிசம்பர்_6 ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மேற்கு_மாவட்டம் 12-11-2017
தமுமுக தஞ்சை மாநகர செயலாளர் மஜகவில் இணைந்தார்…!
தஞ்சை.நவம்பர்.11.,நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக) தஞ்சாவூர் மாநகர செயலாளர் குதூப் தீன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தன்னை மஜகவில் இணைத்துக்கொண்டனர். இதில் மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் மைதீன், மாநகர் செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர். மஜகவின் வெகுஜன மக்கள் பணிகளைகண்டு மாநிலம் முழுதும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_மாநகர்_மாவட்டம் 12/11/2017.
மஜகவில் இணைந்தார்! மமக துணைத் தலைவர் J.S.ரிபாயி!
தஞ்சை.நவ.11., இன்று தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு இணைந்தார். இந்நிகழ்வில் பொருளாளர் S.S.ஹரூண் ரசீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர் ஆகியோர் பங்கேற்றனர். மாநில செயலாளர்கள், தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதின், ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், கோவை பசீர், அப்துல் சமது, பல்லாவரம் ஷபி, புளியங்குடி செய்யது அலி, வசிம் அக்ரம், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோரும், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அகமது கபீர், வடக்கு மாவட்ட செயலாளர் மகருப் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம். 11.11.17