கிருஷ்ணகிரி.டிச.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் நேற்று 02.12.2017 இரண்டு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் மஜகவில் இணைந்து முதன் முதலாக கொடி ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ஓசூர் நகரின் மின் அலுவலகம் முன்பாக மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். இந் நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் சிக்கந்தர் அமீன், வசிம் அக்ரம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சைய்யது அபுதாஹிர், மண்ணிவாக்கம் யூசுப், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளார் சையத் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷபியுல்லாஹ், சர்தார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜாக்கிர், நகர செயலாளர் உமர், சம்சீர், சாதிக், மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கிருஷ்ணகிரி_ மாவட்டம் 03.12.2017
செய்திகள்
ரியாத் IKP மண்டல மருத்துவ அணி செயலாளர் நியமனம்!
ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல மருத்துவ அணி செயலாளராக சகோ. யூசுப்தீன்அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17
ரியாத் IKP மண்டல ஆலோசகர் நியமனம்!
ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல ஆலோசகராக சகோ. அவுலியா முகம்மது அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17
மாணவர் இந்தியா பொறுப்பாளர் செய்யது முகையதீன் மரணம் மஜக இரங்கல்!
#மாணவர்_இந்தியா_பொறுப்பாளர்_செய்யது_முகையதீன்_மரணம்_மஜக_இரங்கல்! (மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி) கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர மாணவர் இந்தியாவின் துணை செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பால் உயிர் இழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது (இன்னா லில்லாஹி…) கல்லூரி பயிலும் போது கல்லூரியில் வசந்த கால கணவுகளோடு வலம் வந்த ஒரு வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிந்து போனது பெரும் துயரமாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நணபர்களுக்கும், மாணவர் இந்தியா சகோதர்களுக்கும், பரங்கிபேட்டை பொதுமக்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது மறுமை வாழ்வு சிறப்படைய இறைவனிடம் பிராத்திக்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 03.12.17
மஜக ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா கலந்து கொண்டார். TR.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாணியம்பாடியில் நடக்கவிருக்கும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது குறித்து பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதில் மாற்று மத சகோதரர் சரவணன் என்பவர் தாமாக முன்வந்து தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். இந் நிகழ்வில் நகர துணைச் செயலாளர்கள் அமீர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான் அஹம்த், நகர தொழில் சஙக அணி செயலாளர் சுஹேப் அஹ்மத், முதஸீர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் ஷாயின்ஷா, ஆகிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 02.12.2017