நாகை.ஜனவரி.26., இந்தியாவில் 73வது குடியரசு தினத்தையொட்டி தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தேசிய கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர்.
இனிப்புகள் வழங்குதல், மரக்கன்றுகள் வினியோகம், ரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு, நலத்திட்ட உதவிகள் என மஜக-வினர் பணிகளை திட்டமிட்டு மக்களோடு குடியரசு விழா மகிழ்ச்சியை பயனுள்ளதாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் காலை 9.30 மணிக்கு சமூக ஆர்வலர் ஹாலிதீன் அவர்கள் தேசிய கொடியேற்றினார்.
அப்போது தேசப்பற்றையும், சமூக நீதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பிறகு கொய்யா, சப்போட்டா, எழுமிச்சை உள்ளிட்ட பழ மரக்கன்றுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு சூழவியல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
அனைத்து சாதி, மதத்தினரும் ஒற்றுமையுடன் பங்கேற்ற இந்நிகழ்வில் பெரும் திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஒன்றிய அரசுக்கு அறிவுரை கூறும் வகையில் இதற்காக அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் காந்தி, நேரு, ஆகிய தியாகிகளோடு பகத்சிங், திப்பு சுல்தான் மருதநாயகம், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துக் கோன், வ.வு.சி, வேலு நாச்சியார் ஆகியோரின் படங்களும் இருந்தது பலராலும் பாராட்டப்பட்டது.
இன்றைய நிகழ்வில் ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், சமூக ஆர்வலர் வை.சுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரதிநிதிகளும், ஊர் பிரமுகர்களும் அரசியல் வேறுபாடின்றி பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், நகரச் செயலாளர் முகம்மது ஷெரிப் உள்ளிட்ட மஜக வினர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26.01.2022