You are here

கூடலூரில் 73வது குடியரசு தின விழா.!

ஜன.26., சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ரபிக், மாவட்ட துணைச் செயலாளர்கள் நிசார்பாபு, ஜோசப், நகர பொருளாளர் அப்துல் மஜீத், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
26.01.2022

Top