You are here

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 73 வது குடியரசு தினவிழா

ஜனவரி.26., நாகை மாவட்டம் திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 73வது குடியரசு தினம் கொடி இரண்டு இடங்களில் ஏற்றப்பட்டது.

மலக்காப்பள்ளி அருகில் கிளை செயலாளர் T.ஹாஜா முயுனுதீன் கொடி ஏற்றி வைத்தார், அதனை தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் J.ஷாகுல் ஹமீது அவர்கள் உறுதிமொழி முழங்கினர்

திருப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் தலைமை செயற்குழு உறுப்பினர் J. ஷாகுல் ஹமீது கொடி ஏற்றி வைத்து, கீழையூர் ஒன்றிய செயலாளர் H.ஜியாவுல் ஹக் உறுதி மொழி முழங்கினார்.மாவட்ட விவாசய அணி செயலாளர் V.ஜெக்கரியா அவர்கள் குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்து உரை நிகழ்த்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ,வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இருதியில் கிளை செயலாளர் Tஹாஜா முயுனுதீன் நன்றியுரையாற்றினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_நாகை_மாவட்டம்

Top