மாணவர் இந்தியா பொறுப்பாளர் செய்யது முகையதீன் மரணம் மஜக இரங்கல்!

image

#மாணவர்_இந்தியா_பொறுப்பாளர்_செய்யது_முகையதீன்_மரணம்_மஜக_இரங்கல்!

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி)

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர மாணவர் இந்தியாவின் துணை செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பால் உயிர் இழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது (இன்னா லில்லாஹி…)

கல்லூரி பயிலும் போது கல்லூரியில் வசந்த கால கணவுகளோடு வலம் வந்த ஒரு வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிந்து போனது பெரும் துயரமாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நணபர்களுக்கும், மாணவர் இந்தியா சகோதர்களுக்கும், பரங்கிபேட்டை பொதுமக்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது மறுமை வாழ்வு சிறப்படைய இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
03.12.17