சென்னை.பிப்.,23., மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னோட்டமாக தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக கோடம்பாக்கம் பள்ளி வாசல் அருகில், வரதராஜன் பேட்டை மாநகராட்சி பள்ளி அருகில், கங்கையம்மன் கோயில் தெரு, 100 அடிசாலை மற்றும் திருநகர் சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடியெற்றி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார், மாநில செயலாளர் சீனிமுஹம்மது அவர்களும் மாநில கொள்கை விளக்கப் பேச்சாளர் மீரான் அவர்களும் மாநில வணிகர்அணி துணை செயலாளரட கலீம் அவர்களும் முன்னிலை வகித்தனர். இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் வசீம் மற்றும் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜீயா, மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது அப்துல் ரஹ்மான், மற்றும் வடபழனி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். மேலும் இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், மாவட்ட
செய்திகள்
காஞ்சி வடக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!
காஞ்சி.பிப்.23., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்டம் சாா்பாக கொடி ஏற்றுதல், தெருமுனை பிராச்சாரம், மருத்துவ முகாம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக மாவட்ட செயலாளா் ஜிந்தா மதாா் அவா்களின் தலைமையில் இன்று முதற்கட்டமாக நான்கு நகர நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் முஹமது யாக்கூப் மாவட்ட, துணை செயலாளா்கள் தாம்பரம் ஜாகீா் உசேன், ஆலந்தூா் சலீம், அணி செயலாளா்கள் பம்மல் ரஹமத்துல்லாஹ், தாம்பரம் காஜா சலீம், பம்மல் அப்துல் காதா் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் நகர செயலாளா்கள் கண்டோன்மெண்ட் அப்துல்சமது, ஆலந்தூா் அல்தாஃப், பல்லாவர நகர துணை செயலாளா் த.அப்துல்லா, பம்மல் மஃக்பூல், கண்டோன்மெண்ட் நகர துணை செயலாளா் த.தமினா ஆகியோா் கலந்து கொண்டனா். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்
மஜக தலைமையக நியமனம் அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக திண்டுக்கல் A.ஹபிபுல்லா (ரயில்வே ) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம். இவன்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.02.2018
நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் ! நாகூரில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
நாகை. பிப்.11., இன்று நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் ( MJTS ) நாகை (தெ) மாவட்ட செயலாளர் அல்லா பிச்சை அவர்களின் மகள் திருமணத்தில் பங்கேற்று மஜக செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:- நாகூர் மக்கள் எனக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்துள்ளார்கள். அதனால் சாதி, மதங்களை கடந்து அனைவருக்கும் நான் பணியாற்றுகிறேன். பல நல திட்டங்களை நாகூரில் அமல்படுத்தி வருகிறேன். காரைக்கால் - வாஞ்சூரில் அமைந்துள்ள மார்க் துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரி இறக்குமதியால் நாகூர், பட்டிணச்சேரி, பனங்குடி பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை முதல் முதலில் நான் தான் சட்டமன்றத்தில் பேசினேன் என்பதை அனைவரும் அறிவர். விதிகளை மீறி செயல்படும் மார்க் துறைமுகத்திற்கு எதிராக, நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய கோரி விரைவில் நாகூரில் மஜக சார்பாக பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்படும். அது தமிழ்நாடு, புதுச்சேரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். அதில் தமிழகத்தின் பிரபல தலைவர்கள் பங்கேற்பார்கள். விரிவான ஆலோசனைக்கு பிறகு, அது எத்தகைய போராட்டம் என்பது
அலங்காரங்களை கொண்ட பட்ஜெட்!மத்திய பட்ஜெட் குறித்து மஜக விமர்சனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) 2018 - 2019 ஆம் ஆண்டடிற்கான மத்திய பட்ஜெட் என்பது கடந்த 4 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட "பெரு முதலாளிகளை" திருப்திப்படுத்தும் பட்ஜெட்டின் வரிசையிலேயே இடம் பெற்றிருக்கிறது. 3வது இடத்தில் வலுவான பொருளாதார தேசமாக இருந்த இந்தியா, இன்று 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. நிதிபற்றாக்குறை என்பது 3.2 சதவிதத்திலிருந்து 3.5 சதவிதமாக உயர்ந்திருக்கிறது. இதை இந்த பட்ஜெட் மூடி மறைக்கிறது. கறுப்பு பணத்தை மீட்டு ஓவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பாஜக கூறிய தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சியன் இறுதி பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படும் என்ற எதிர்ப்பார்பு மீண்டும் பொய்யாகி இருக்கிறது. சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களான மலைவாழ் மக்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் வறுமை நிலைக்கேற்ப எந்த ஒரு அறிவிப்புகளும் இதில் இல்லை. அதுபோல் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நலன்கள் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளன. விவாசயிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என