You are here

தென் சென்னை மே மாவட்டம் மஜக கொடியேற்றுதல் நிகழ்ச்சி…! பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA ஏற்றிவைத்தார்…!!

சென்னை.பிப்.,23., மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னோட்டமாக தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக கோடம்பாக்கம் பள்ளி வாசல் அருகில், வரதராஜன் பேட்டை மாநகராட்சி பள்ளி அருகில், கங்கையம்மன் கோயில் தெரு, 100 அடிசாலை மற்றும் திருநகர் சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடியெற்றி, சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார், மாநில செயலாளர் சீனிமுஹம்மது அவர்களும் மாநில கொள்கை விளக்கப் பேச்சாளர் மீரான் அவர்களும் மாநில வணிகர்அணி துணை செயலாளரட கலீம் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் வசீம் மற்றும் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜீயா, மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது அப்துல் ரஹ்மான், மற்றும் வடபழனி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முஹம்மது கனி மற்றும் நுாற்றுக்கணக்காணோர்கள் கலந்துக்கொண்டனர்.

#தகவல்
#மஜக_தொழில் நுட்ப_அணி
# MJK_IT_WING
#தென்சென்னை_மே_மாவட்டம்
23.02.2018

Top