அலங்காரங்களை கொண்ட பட்ஜெட்!மத்திய பட்ஜெட் குறித்து மஜக விமர்சனம்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

2018 – 2019 ஆம் ஆண்டடிற்கான மத்திய பட்ஜெட் என்பது கடந்த 4 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட “பெரு முதலாளிகளை” திருப்திப்படுத்தும் பட்ஜெட்டின் வரிசையிலேயே இடம் பெற்றிருக்கிறது.

3வது இடத்தில் வலுவான பொருளாதார தேசமாக இருந்த இந்தியா, இன்று 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. நிதிபற்றாக்குறை என்பது 3.2 சதவிதத்திலிருந்து 3.5 சதவிதமாக உயர்ந்திருக்கிறது. இதை  இந்த பட்ஜெட் மூடி மறைக்கிறது.

கறுப்பு பணத்தை மீட்டு ஓவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பாஜக கூறிய தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சியன் இறுதி பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படும் என்ற   எதிர்ப்பார்பு மீண்டும் பொய்யாகி இருக்கிறது.

சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களான மலைவாழ் மக்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் வறுமை நிலைக்கேற்ப எந்த ஒரு அறிவிப்புகளும் இதில் இல்லை.

அதுபோல் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஆளும்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நலன்கள் பெருமளவு  புறக்கணிக்கப்பட்டுள்ளன.

விவாசயிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என அறிவித்துருந்தார்கள், ஆனால் கொடுக்கப்படவில்லை.

ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல பகட்டான அறிவிப்புகள் உள்ளனன. இதில் கூட அதானி போன்ற பெரு நிறுவன முதலாளிகள் ஆதாயம் அடையும் வகையிலேயே அறிவிப்புகள் உள்ளது. சிறு, குறு விவசாயிகளின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து எதுவும் கூறப்படவில்லை.

வெளிநாட்டு நிறுவளங்களும், அதை சார்ந்த இடைத் தரகர்களும் பயனடையும் வகையில் காப்பீட்டு திட்டங்களின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராணுவத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் அறிவிப்புகள் மிகவும் அபாயகரமானவை.

கார்ப்பரேட் பெரும் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதும், தனி நபர் வருமான வரி உயர்த்தப்படாததும், பெட்ரோல் – டிசல் வரிகளில் செய்யப்பட்டிருக்கும் நாடகதனமும், இது யாருக்கான பட்ஜெட் என்பதை உணர்த்துகிறது.

மத்திய அரசின் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது எளிய மக்களை புறக்கணிக்கும் பட்ஜெட்டாகவும், அலங்கார அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாகவும், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை போன்றும் இருக்கிறது.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
01/02/2018.