ரியாத்.மே.11., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) ரியாத் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நசிரியா பகுதியில் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் தலைமையில் இன்று (11-05-2018) காலை 8:00 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னால் தலைமை ஆலோசகர் ஜனாப் நாகை என்.எஸ்.ஹமீது, துணை செயலாளர் S.முஹம்மது நிவாஜிதீன், மருத்துவ அணி S.யூசுப்தீன், மண்டல ஒருங்கிணைப்பாளர் J.சாதிக் பாட்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் எதிர்வரும் ரமளான் மாத இஃப்தார் நிகழ்ச்சிகள் சம்மந்தமாக ஆலோசிகப்பட்டது. தகவல்; #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத்_மண்டலம் #IKP_IT_WING 11.05.2018
செய்திகள்
காரைக்காலில் பிரஞ்சு டிராவல்ஸ் நிறுவன அலுவலக திறப்பு விழா..! மஜக தமிமுன் அன்சாரி MLA மற்றும் முன்னால் அமைச்சர் நாஜீம் ஆகியோர் பங்கேற்ப்பு..!!
காரைக்கால்.மே.11., நேற்று காரைக்கால் லெமர் வீதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளரும், பிரஞ்சு டிராவல்ஸ் (French travels) உரிமையாளருமான பாவா பஹ்ரூதீன் அவர்களின் அலுவலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினரும் மஜகவின் பொதுச்செயலாளருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் திறந்து வைத்தார்கள், அவர்களுடன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் AMH.நாஜீம், சட்டமன்ற உறுப்பினர் KAU.அசனா, குவைத் ஆரிபு மரைக்காயர், மஜக விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மஜக நாகை மாவட்ட செயலாளர் பரக்கத் அலி மற்றும் காரை, நாகை மஜக மாவட்ட நிர்வாகிகள் கலந்து முக்கியஸ்தர்கள், ஜமாத்தர்கள், இமாம்கள் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல் _தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காரைக்கால்_மாவட்டம்
திருவொற்றியூரில் MJTS திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் திறந்து வைத்தார்..!!
திருவள்ளூர்.மே.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில், பகுதி தொழிற்சங்க செயலாளர் பி.ராஜா தலைமையில் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது., M.com., அவர்கள் பங்கேற்று #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் பந்தல் அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வரருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெயர் பலகை திறந்து வைத்த பின்னர், பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அனைவருக்கும் நீர் , மோர் மற்றும் தர்பூசினி பழங்கள் வழங்கினார்கள். மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றிவிட்டு பத்திரிக்கை நிருபர்களிடம் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறுகையில்... வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பல் தமிழ்நாட்டில் வந்து இருப்பதாக செய்திகள்
கோவை வெள்ளலூர் பகுதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..! மஜக துணை பொதுச்செயலாளர் வாழ்த்துரை..!!
கோவை.மே.11., கோவை வெள்ளலூர் பகுதியில் புதிதாக குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு குறிச்சிபிரிவு பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பகுதியில் பள்ளிவாசல் தேவை என்பதால் ஜமாத்தார்களும் அனைத்து இயக்க நிர்வாகிகளும் ஒன்றிணைந்து முயற்சி செய்தனர். அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் பள்ளிவாசல் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு இன்று ஜூம்ஆ தொழுகையுடன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 11.05.18
மஜக மாநில செயலாளருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு..!
மதுரை.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி தனது சொந்த பணிகள் காரணமாக மதுரை வழியாக பயணம் மேற்கொண்ட மஜக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா அவர்களுக்கு மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோர் அவரை உற்சாகமாக வரவேற்று சால்வை அணிவித்தனர். கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பின் அங்கிருந்து விடைபெற்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 10.05.2018