திருவொற்றியூரில் MJTS திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் திறந்து வைத்தார்..!!

திருவள்ளூர்.மே.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில், பகுதி தொழிற்சங்க செயலாளர் பி.ராஜா தலைமையில் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது., M.com., அவர்கள் பங்கேற்று #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் பந்தல் அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வரருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக,

பெயர் பலகை திறந்து வைத்த பின்னர், பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அனைவருக்கும் நீர் , மோர் மற்றும் தர்பூசினி பழங்கள் வழங்கினார்கள்.

மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றிவிட்டு பத்திரிக்கை நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறுகையில்…

வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பல் தமிழ்நாட்டில் வந்து இருப்பதாக செய்திகள் முகநூலிலும், காவல்துறை அதிகாரிகளாலும் அறிவிப்பு வந்தப்படி உள்ளது, பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது மட்டும் இல்லாமல் செய்தியின் உண்மை தன்மை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் , கடந்த வாரங்களில் வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை வெவ்வேறு மாவட்டத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பிடித்து அடித்த கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்..

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர் , தலைமையில் எல்.ஜாபர் சாதிக் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் , மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.முஹம்மது அஸாருதீன்,தொழிற்சங்க மாநில செயலாளர் சலீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம், பகுதி செயலாளர் எச்.கதிர் உசேன் , பகுதி பொருளாளர் எம்.எஸ். காஷிம் ஷெரிப்,
பகுதி துணை செயலாளர்கள் ஆரிஃப் ,
வெங்கடேசன் , பகுதி ஊடக அணி செயலாளர் ஏ.பேரோஸ்கான் , பகுதி மனித உரிமை அணி அப்ரார், பகுதி தொழிற்சங்க தலைவர் பி.ராஜா , தொ.செயலாளர் என்.வரதன், தொ.பொருளாளர் என்.ரமேஷ்,
தொ.து. செயலாளர் பி.சரவணன் , தொ.து. செயலாளர் எம்.செந்தில் குமார் மற்றும் கிளை , வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்