தம்மாம். ஜூன்.09. மஜகவின் அயல்நாட்டு பிரிவான #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சார்பில் #இஃப்தார் என்னும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று (08.06.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சவூதி மற்றும் அணைத்துநாட்டு சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_தம்மாம்_மண்டலம் #IKP_IT_WING
செய்திகள்
மஜக சார்பில் கறம்பக்குடியில் அன்பால் இணைவோம் இஃப்தார் நிகழ்ச்சி… !
கறம்பக்குடி.ஜூன்.09., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் #அன்பால்_இணைவோம் #இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் #மஜக மாநில செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜூதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் விஜய ரவி பல்லவராயர் அவர்கள் மற்றும் சிவ.திருமேணிநாதன் AEO, இலக்கிய மன்ற தலைவர் C.வேலு MA, மாரிக்கண்ணு ஆசிரியர், DR .சந்திரசேகரன் MBBS , வியாபாரிகள் சங்க தலைவர் K.சுரேஷ் , BJP மாவட்ட செயலாளர் தமிழரன், விஜயன் ML , சம்பத் ஆசிரியர், ஜமாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜி.A.M. கலிபுல்லா , கலீல்ரஹ்மான் உலவி, சுஹபத்அலி மிஸ்பாஹி , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சிறப்பான நிகழ்வில் கறம்பக்குடி வர்ததக சங்கத்தினர் , வியாபாரிகள் சங்கத்தினர் , ரோட்டரி சங்கத்தினர் , அனைத்து கட்சி பிரமுகர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், மஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர். இறுதியாக மஜக
நாகையில் மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி..! நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்..!!
நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (2017-18) மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் (WATER BED) வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் பயணாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கினர். இந் நிகழ்வில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 09.06.18
காஞ்சி வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!
காஞ்சி.ஜூன்.08., காஞ்சி வடக்கு மாவட்டம் பம்மல் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பல்லாவரம் இனாயத் மஹாலில் #இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி பம்மல் நகர செயலாளர் A.மக்பூல் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மஜக பொதுசெயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, மாநில செயலாளர் NA.தைமியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளர் பம்மல் சலீம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் N.அன்வர்பாஷா, தாம்பரம் தாரிக் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் A.யாக்கூப், அப்துல்காதர், ரஹமத்துல்லாஹ், காஜா சலிம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர். இந்நிகழ்வில் பம்மல், பல்லாவரம், கன்டோன்ட்மென்ட், நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்
வேல்முருகன் கைதை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!!
கடலூர்.ஜூன்.08., தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் #வேல்முருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டிருப்பதை கண்டித்து. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு தோழர்.வேல்முருகன் கைதுக்கு காரணமான மத்திய பாசிச அரசுக்கெதிராகவும், தமிழக அரசுக்கெதிராகவும் தனது கண்டனத்தை வெளிபடுத்தினார். இந்த ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அஜ்மிர்கன், மாணவர்இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட மீனவர்அணி செயலாளர் சேட், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் மன்சூர், பண்ருட்டி நகர செயலாளர் யாசின், கடலூர் நகர செயலாளர் ரியாஸ், நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது, ஒன்றிய செயலாளர் ஆதம் சேட், நெய்வேலி டவுன்ஷிப் நகர நிர்வாகி ரியாஸ், நெல்லிகுப்பம் நகர செயலாளர் பாசித், Ot கிளை செயலாளர் அப்துல்ரஹிம், அண்ணா நகர் ஒன்றிய செயலாளர் ரஹிம், மற்றும் பல்வேறு நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர். மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து