மஜக சார்பில் கறம்பக்குடியில் அன்பால் இணைவோம் இஃப்தார் நிகழ்ச்சி… !

கறம்பக்குடி.ஜூன்.09., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் #அன்பால்_இணைவோம் #இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது.

இதில் #மஜக மாநில செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜூதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் விஜய ரவி பல்லவராயர் அவர்கள் மற்றும் சிவ.திருமேணிநாதன் AEO, இலக்கிய மன்ற தலைவர் C.வேலு MA, மாரிக்கண்ணு ஆசிரியர், DR .சந்திரசேகரன் MBBS , வியாபாரிகள் சங்க தலைவர் K.சுரேஷ் , BJP மாவட்ட செயலாளர் தமிழரன், விஜயன் ML , சம்பத் ஆசிரியர், ஜமாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜி.A.M. கலிபுல்லா , கலீல்ரஹ்மான் உலவி, சுஹபத்அலி மிஸ்பாஹி , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த சிறப்பான நிகழ்வில் கறம்பக்குடி வர்ததக சங்கத்தினர் , வியாபாரிகள் சங்கத்தினர் , ரோட்டரி சங்கத்தினர் , அனைத்து கட்சி பிரமுகர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், மஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.

இறுதியாக மஜக மாவட்ட செயலாளர் N.துரை முஹம்மது BA , அவர்கள் நன்றி கூறினார் .

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கறம்பக்குடி_நகரம்
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் .