மாணவர் சமுதாயத்தை அறிவுத்திறன் சார்ந்த மாணவர்களாக உருவாக்குவதே மாணவர் இந்தியாவின் குறிக்கோளாகும் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய செயலா? Facebook , What's App - ல் கருத்து சொல்வது மட்டும் தான் நமது சமூக பங்களிப்பா? நாளொரு மேனியும், பொழுதோடு வண்ணமுமாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய போகிறோம்? சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றவது இது தான் இளைஞர்களின் இன்றிமையாத பணியா? இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மாணவர் இந்தியா அன்போடு அழைக்கிறது. இரண்டு நாள் முழுநேர பயற்சி முகாம் 2017 மே 13,14 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் { ECR ரோடு } நடைபெற உள்ளது. மாணவர் இந்தியா நடத்தும் திறன் மேம்பாடு கோடை கால பயற்சி முகாமிற்கு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சாதனையாளர்கள், கலைத்துறையினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பயற்சி வழங்குவார்கள். கல்லூரி மாணவர்கள் மட்டும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமே அனுமதி. இம்முகாமில் பங்கேற்பவர்களின் பதிவு கட்டணம்
முகாம்கள்
தஞ்சை வழுத்தூரில் மஜகவின் மாவட்ட கலந்தாய்வு & புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!
தஞ்சை.ஏப்.11,.நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ராயல் மஹாலில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட கலந்தாய்வு & புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்தினார்கள். உடன் மாநில வர்த்தக அணி செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா, மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளை, பகுதி, நகரம், ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக மற்ற அமைப்பு, கட்சியில்இருந்து விலகி வந்த எழுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை மாவட்டம். 10.04.2017
நாகை நகரத்தில் மஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!
நாகை.ஏப்.09., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து விலகிய ஏராளமானோர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை நாகை நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம். 09.04.2017
வேலூர் மாவட்டம் மஜக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் ஃபிரிசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு…
வேலூர்.ஏப்.02., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் இந்திரா நர்சிங் ஹோம் இணைந்த நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வேலூர் சைதாப்பேட்டையில் K.M.K திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் துவக்கி வைத்தார்கள். 3-மண்டல செயலாளர் A.முஹம்மத் பாயில் தலைமை தாங்கினார், 30,31,வது கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாபர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ஹமித் மற்றும் மண்டல, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மகளிருக்கான பரிசோதனை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் அறுவை சிகிச்சைகள் செய்ய இலவசமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன 500 மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்டைந்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக அனைத்து சமுதாய மக்களுக்கான ஃபிரீஸர் பாக்ஸ் (குளிர்சாதன பெட்டி) மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது அவர்கள் அர்ப்பணித்தார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வேலூர் (கி) மாவட்டம் 02.04.2017
வேலூர் (மே) குடியாத்தம் ஒன்றியம் காயிதேமில்லத் நகரில் மஜக உறுப்பினர் சேர்க்கை…
வேலூர், மார்ச்.20., நேற்று வேலூர் மே மாவட்ட குடியாத்தம் ஒன்றிய காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த முகாமினை மாவட்ட து செயலாளர் S.M.D.நவாஸ் தொடங்கி வைத்தார்., உடன் மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப் மற்றும் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹ்மத், நகர துணை செயலாளர் N.சலீம், ஒன்றிய பொருளாளர் W.அமீன், ஒன்றிய து.செயலாளர் அம்ஜத் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமானோர் ஆர்வமாக தங்கள் மஜக உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 20.03.2017