சென்னை.மார்ச்.25.,கா்நாடகத்தில் கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து, வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனா். M.R.நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்வர் தலைமை வகித்து, விழிப்புணா்வு முழுக்கங்களை எழுப்பினாா். துணை பொதுச் செயலாளா் என்.ஏ.தைமிய்யா கண்டன உரையாற்றினார். மஜக மகளிா் அணியினா் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனா். 36வது வட்ட செயலாளர் ஷேக் மொய்தீன், பொருளாளர் இஸ்மாயில் உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனா். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJKITWING வடசென்னை மேற்கு மாவட்டம் 25.03.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
CMN சலீம் இல்ல திருமணம்..மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
புதுகை. மார்ச் 20., சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களின் மகள் டாக்டர்.மெர்லின் சஃப்ரான் அவர்களுக்கும், மணமகன் டாக்டர் .செய்யது இப்ராகிம் அவர்களுக்கும் இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்ப்பட்டினம் மஸ்ஜிதில் திருமணம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் IUML தேசிய தலைவர் பேரா. காதர் மொய்தீன், SDPI மாநில தலைவர் நெல்லை. முபாரக், மவ்லவி முகம்மது கான் பாகவி, மவ்லவி மன்சூர் காஸிஃபி உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வில் பொதுச் செயலாளரோடு மஜக மாநில துணைச்செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் 20.03.22
மீனவர்கள் விவகாரம்..! ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!
திருவாரூர்,மார்ச் 18.,மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட சார்பாக தமிழக கடல்கரை மீனவர்களை இலங்கை அரசால் தொடர்ந்து சுட்டு கொன்றும் அத்துமீறியும்,துன்புறுத்தியும்,மீனவ படகுகளை அபகரித்தும் வருகின்றதை கண்டித்து மாநிலம் தழுவிய மீனவர்களுக்கான போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் P.M.A சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாலர் சேக் அப்துல்லா, மாவட்ட துணைசெயலாளர் நத்தர்கனி,மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சித்திக், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் நிஜாம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜபுருல்லா, மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் பொதகுடி அபி, திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன்,கூத்தாநல்லுர் சாகுல் ஹமீது மற்றும் தொழமை கட்சியை சார்ந்த இயக்கங்களும் கலந்துகொண்டனர். தகவல்; மஜக தகவல்தொழில்நுட்ப அணி MJK-it-WING திருவாரூர் மாவட்டம் 19.03.2022
துபை (DUBAI)Expo 2020 கீழடியை காட்சி படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது..! துபை FM வானொலி பேட்டியில் மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
மார்ச் 17,ஐக்கிய அரபு அமீரக வருகையின் ஒரு பகுதியாக துபையில் ஒலிபரப்பாகி வரும் பிரபல 89.4 பண்பலை வானொலி நிலையத்திற்கு இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி சிறப்பு பேட்டியளித்தார். பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர் துபையில் நடைபெற்று வரும் பன்னாட்டு வணிக கண்காட்சியான துபை Expo 2020 குறித்த கேள்விக்கும் பதிலளித்தார். இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெவிலியனுக்கு சென்ற போது அங்கு விஞ்ஞானம் , தொழில் நுட்பம் குறித்த பல விஷயங்கள் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது என்றார். ஆனால் வளைகுடாவுடன் நெருங்கிய தொடர்பில் தமிழகமும், கேரளாவும் இருப்பதால் இம்மாநிலங்கள் தொடர்பான விஷயங்கள் அதிகம் முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார். குறிப்பாக தமிழகத்தின் கீழடி தொடர்புடைய பழமையான தமிழர் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள் ஒளித்திரை மூலம் காட்டப்படாது ஏமாற்றமாக இருந்ததாக கூறினார். கேரள முதல்வர் வந்தபோது இந்திய பெவிலியன் கேரள அரங்கம் போல் மாற்றப்பட்டது. அது போல இம்மாதம் தமிழக முதல்வர் இங்கு வருகை தரும் போது அது போன்ற மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் கூறினார். தமிழக முதல்வரின் வருகையையொட்டி சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் சிறப்புகள், மதுரை மீனாட்சி
துபை டிபா TEPA சார்பில் வரவேற்பு..மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
மார்ச்.16., ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வாழும் தமிழக தொழிலதிபர்கள், அலுவலக முதன்மை நிர்வாகிகள் ஒன்றிணைந்து Tamil Entrepreneurs & Professionals Associates ( #TEPA ) என்ற அமைப்பை கடந்த ஈராண்டுகளாக நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பின் சார்பில் அமீரகம் வருகை தந்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் தலைவர் பால் பிரபாகர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். பிறகு அதன் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, அமைப்பின் நோக்கங்களை விளக்கினார். அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களிடம் தொழில் மற்றும் வணிக சிந்தனைகளை ஊக்குவிப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது இதன் முதன்மை நோக்கங்கள் என்றும், வேலை வாய்ப்பு, சட்ட வழிகாட்டல் போன்ற இதர சேவைகளையும் தாங்கள் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர். சாதி, மதம் கடந்து தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் #டிபா (TEPA) அமைப்புக்கு பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தனது வாழ்த்துக்களை கூறினார். அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை ( #MKP) யின் மண்டல பொருளாளர் அபுல் ஹஸன் அவர்கள் TEPA வுடன் இணைந்து பல்வேறு சேவைகளை இனி