You are here
Home >

புதுகை. மார்ச் 20., சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களின் மகள் டாக்டர்.மெர்லின் சஃப்ரான் அவர்களுக்கும், மணமகன் டாக்டர் .செய்யது இப்ராகிம் அவர்களுக்கும் இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்ப்பட்டினம் மஸ்ஜிதில் திருமணம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்வில் IUML தேசிய தலைவர் பேரா. காதர் மொய்தீன், SDPI மாநில தலைவர் நெல்லை. முபாரக், மவ்லவி முகம்மது கான் பாகவி, மவ்லவி மன்சூர் காஸிஃபி உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளரோடு மஜக மாநில துணைச்செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
20.03.22

Top