மார்ச்.16., ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வாழும் தமிழக தொழிலதிபர்கள், அலுவலக முதன்மை நிர்வாகிகள் ஒன்றிணைந்து Tamil Entrepreneurs & Professionals Associates ( #TEPA ) என்ற அமைப்பை கடந்த ஈராண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
அந்த அமைப்பின் சார்பில் அமீரகம் வருகை தந்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் தலைவர் பால் பிரபாகர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். பிறகு அதன் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, அமைப்பின் நோக்கங்களை விளக்கினார்.
அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களிடம் தொழில் மற்றும் வணிக சிந்தனைகளை ஊக்குவிப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது இதன் முதன்மை நோக்கங்கள் என்றும், வேலை வாய்ப்பு, சட்ட வழிகாட்டல் போன்ற இதர சேவைகளையும் தாங்கள் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
சாதி, மதம் கடந்து தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் #டிபா (TEPA) அமைப்புக்கு பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தனது வாழ்த்துக்களை கூறினார்.
அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை ( #MKP) யின் மண்டல பொருளாளர் அபுல் ஹஸன் அவர்கள் TEPA வுடன் இணைந்து பல்வேறு சேவைகளை இனி முன்னெடுப்போம் என்றும் அவர்களிடம் கூறினார்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
தலைமையகம்.
15.03.22