நெல்லையில்… MOC இல்லத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை! நெல்லை இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களும்.வருகை…

ஏப்ரல்.06.,

நெல்லையில் சிறப்பு வாய்ந்த முஸ்லிம் அனாதை இல்ல (MOC) வளாகத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நல்லெண்ண வருகை தந்தார்.

அவரை இதன் தலைவர் M.K.M கபீர் அவர்களும், செயலாளர் டாக்டர் MKM முகம்மது சாபி அவர்களும் வரவேற்றனர்.

1957-ல் மேடை முதலாளி எனப்படும் அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்கள் முன்முயற்சியில் காயிதே மில்லத் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் துணையோடு இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.

பெட்டைக்குளம் காதர் மீரான் சாகிப் போன்றோர் இடங்களை தானமாக அளித்துள்ளனர்.

மறைந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் சாகிப் அவர்களின் முன் முயற்சியில் தான் நெல்லை சீமையில் புகழ்பெற்ற சதக்கத்துல்லா அப்பா கல்லூரியும் நிறுவப்பட்டது.

அதன் பிறகு ஜமால் முகம்மது அவர்கள், செய்யது பீடி நிறுவனர் நெய்னா முகம்மது ஆகியோர் இதனை அடுத்தடுத்து சிறப்பாக வழிநடத்தியுள்ளனர்.

12 ஏக்கர் பரப்பளவில் உள்ள MOC – வளாகத்தில் இயங்கும் +2 வரையிலான அரசு உதவிபெறும் பள்ளியும்
அனாதை மற்றும் ஏழ்மை பின்னணியில் உள்ள மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் பயில்கின்றனர். விடுதி வசதிகளும் இருக்கிறது.

இதன் சேவைகளை கேட்டறிந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், இதன் நிறுவனர்கள் மற்றும் அன்று பணியாற்றியவர்கள், இன்று இதில் பணியாற்றுபவர்கள், நிதியுதவி செய்தவர்கள் என அனைவரின் பணிகளும் போற்றத்தக்கது என வாழ்த்தியதுடன், அவர்கள் அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

அப்போது அங்கு நெல்லை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. ராபர்ட் புருஸ் வருகை தந்தார்.

அவரிடம் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு இந்த சேவை நிறுவனத்திற்கு தங்களின் MP நிதியிலிருந்து கட்டிடங்கள் கட்டிக் கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார்.

அப்போது மஜக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நெல்லை. பிலால், மாவட்டச் செயலாளர் பாளை. பாரூக், ஜங்சன் பள்ளி ஜமாத் தலைவர் R.M. நியாமத்துல்லாஹ் ஹாஜியார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
06.04.2024.