You are here
Home >

மார்ச் 17,ஐக்கிய அரபு அமீரக வருகையின் ஒரு பகுதியாக துபையில் ஒலிபரப்பாகி வரும் பிரபல 89.4 பண்பலை வானொலி நிலையத்திற்கு இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி சிறப்பு பேட்டியளித்தார்.

பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர் துபையில் நடைபெற்று வரும் பன்னாட்டு வணிக கண்காட்சியான துபை Expo 2020 குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.
இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெவிலியனுக்கு சென்ற போது அங்கு விஞ்ஞானம் , தொழில் நுட்பம் குறித்த பல விஷயங்கள் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது என்றார்.

ஆனால் வளைகுடாவுடன் நெருங்கிய தொடர்பில் தமிழகமும், கேரளாவும் இருப்பதால் இம்மாநிலங்கள் தொடர்பான விஷயங்கள் அதிகம் முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக தமிழகத்தின் கீழடி தொடர்புடைய பழமையான தமிழர் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள் ஒளித்திரை மூலம் காட்டப்படாது ஏமாற்றமாக இருந்ததாக கூறினார்.

கேரள முதல்வர் வந்தபோது இந்திய பெவிலியன் கேரள அரங்கம் போல் மாற்றப்பட்டது. அது போல இம்மாதம் தமிழக முதல்வர் இங்கு வருகை தரும் போது அது போன்ற மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் கூறினார்.

தமிழக முதல்வரின் வருகையையொட்டி சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் சிறப்புகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், நாகூர் தர்ஹா, வேளாங்கண்ணி சர்ச் ஆகியவை குறித்த செய்திகள் இந்திய பெவிலியனில் இடம் பெற இந்திய தூதரகம் முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவரது ஒரு மணி நேர பேட்டி வளைகுடா வாழ் தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
மஜக தலைமையகம்
17.03.22

Top