ஜான.14., தமிழக அனைத்து விவசாயிகள் சங்ககளின் ஒருங்கிணைப்பு சார்பாக காவேரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையில் துவங்கிட, விவசாயிகளின் அதிர்ச்சி மரணங்களுக்க காரணமான மத்திய அரசை கண்டித்து திருவாரூர் ரயில்வே ஜங்சன் நுழைவாயில் முன்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் P.R பாண்டியன் தலைமையில் ஒருநாள் உண்ணவிரத போராட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவாரூர் மாவட்டம்.
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக மாநில பொருளாளர். பாண்டிச்சேரி வருகை.
பண்ருட்டியில் கொடி ஏற்று விழாவில் மஜக மாநில பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன்அன்சாரி M.L.A. அவர்கள் பண்ருட்டியில் கொடி ஏற்று விழாவில் கலந்து கொண்டு இரன்டு இடங்களில் கொடி ஏற்றினார்கள். நிகழ்ச்சியில் கடலுர் மாவட்ட நிர்வாகிகள், புதுவை நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்டம் நிர்வாகிகள், பண்ருட்டி நகர கழக நிர்வாகிகள், மங்களம் பேட்டை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு
சமூக_நல்லிணக்க_பொதுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் ஜமாத்துகளின் ஆதரவோடு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA. INTJ தலைவர் பாக்கர், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், ஜமாத்துல் உலமா மாநில துணை தலைவர் தர்வாஷ் ரஷாதி உள்ளிட்டோர் உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல்; மஜக ஊடக பிரிவு கடலூர் வடக்கு.
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) உலகமெங்கும் வாழும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. வயலில் ஏர் பூட்டி; சேறு மிதித்து; விதை விதைத்து; விவசாயம் வளர்த்து; அதன் அறுவடையை கொண்டாடும் உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சிக்குரிய தினமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் இனத்தின் பொதுப் பண்டிகையை, இடைக்காலத்தில் சிலர் வழிபாட்டு ரீதியாக திசை மாற்றினார்கள். இன்று புத்தெழுச்சிமிக்க தமிழ் தலைவர்களாலும், அறிஞர்களாலும் பொங்கல் பண்டிகை சார்பற்ற -வழிபாடுகளற்ற-அறுவடைத் திருநாளாக - சமத்துவ பொங்கலாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர் விளையாட்டாம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தல், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், நீராதாரங்களை பாதுகாத்தல் ஆகிய உயரிய லட்சியங்களை நிறைவேற்ற இந்நாளில் சபதம் ஏற்போம்! தமிழர் ஒற்றுமைக்காக பாடுபடுவோம்! உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி(MJK). 13/01/2017