புதுகை.ஜூன்.06., மாவட்ட செயலாளர் முபாரக் அலி உரை உரை நிகழ்த்தினார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மக்களை திரட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும்-என பேசினார், ஆர்பாட்டத்தில் மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட மாவட்ட பொருளாளர் அரசை சேக் இஸ்மாயில் மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி மாவட்ட துணைச் செயலாளர் அரசநகரி சையது அபுதாஹிர். மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்பாஸ். மாவட்ட தொழில் நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன் அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர் தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி , மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #MJK_IT_WING 06.05.2017
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மதுபானக்கடையை அகற்றுக..! நாகை MLA., கலெக்டரிடம் வலியுறுத்தல்…!
நாகை. ஜுன்.05., நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றுமாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரியிடம் தொகுதி மக்கள் கோரிக்கை அளித்தனர். பல பொதுநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமாரை தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சந்தித்து நாகை இரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் மதுபான கடையையும், நாகை திருமேனிசெட்டி தெருவில் உள்ள மதுபான கடையையும் உடனடியாக அகற்றிடுமாறு வலியுறுத்தினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் .நாகப்பட்டினம்
கண்ணிய தலைவர் அன்றோ…! நமது காயிதே மில்லத்!
இந்தியாவில் ஒரு தலைவருக்கு 'கண்ணியத்திற்குரிய' என்ற அடைமொழி வழங்கப்படுகிறது என்றால் அது காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களுக்கு மட்டும் தான் என்பது நாடறிந்த உண்மை! கறைபடாத கரம், நேர்மையான சிந்தனைகள், கண்ணியமான அணுகுமுறைகள், எளிமையான பொதுவாழ்வு, தூய்மையான தனி வாழ்வு, சவாலான விவகாரங்களில் துணிச்சலான முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டின் மீது அவர் காட்டிய அக்கறை, தமிழ் மீதான தணியாத தாகம், சமூக நல்லிணக்கத்தில் அவர் காட்டிய உறுதி இவையாவும் அந்த பெருமகனை வரலாற்றின் வெளிச்சத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நேரு, பெரியார், அண்ணா, அபுல்கலாம் ஆசாத், அறிவாசான் அம்பேத்கார், நம்பூதிபாட், தோழர். ஜீவா, ஐயா முத்துராமலிங்கத் தேவர், கலைஞர், MGR, நாவலர் நெடுஞ்செழியன், பேரா.அன்பழகன் என நாடு தழுவிய அளவில் அவர் கொண்டிருந்த நட்புகள் அவரது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்திய - சீன யுத்தம் நடந்தபோது, எனது மகன் மியாகானை ராணுவத்துக்கு பணியாற்ற அனுப்புகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார். எது தேசிய மொழி என நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது, என் மொழி தமிழுக்குத்தான் அந்த தகுதி உண்டு என அடித்துப் பேசினார். நாடு பிளவுப்பட்ட நிலையில், ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களைப் பார்த்து
மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
திருப்பூர்.ஜூன்.04., திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி (ஆகாரம்), M.மீரான் (வெங்கமேடு), E.ரஹ்மான், M.அப்பாஸ், P.ஈஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் J.மீரான்கனி, S.அபுதாஹீர், S.அப்துல் அக்கிம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அணி நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளராக A.முஹம்மது சஹாபுதீன் அவர்களும், துணைச் செயலாளராக S.அபுதாஹீர் அவர்களும், மாவட்ட வர்த்தகரணி செயலாளராக M.காஜாமைதீன் அவர்களுடன் மேலும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக P.நவ்பில் ரிஜ்வான் அவர்களும் நியமனம் செய்ய மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. பெரிய தோட்டம் பகுதியில் கிளை அமைப்பது எனவும், இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக இந்த ரமலானில் மக்களிடன் பித்ரா தொகையை வசூலித்து அதை உரிய மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகவல்; தகவல்
தஞ்சை இப்தாரில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூர் கீழவாசல் ஹனபியா பள்ளிவாசளில் ஹனபியா பள்ளி ஜமாத்தும், நகர மனிதநேய ஜனநாயக கட்சியும் இணைந்து இன்று நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை.முபாரக், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யூசுப் ராஜா, கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணைச் செயலாளர் மெய்தீன், நகர நிர்வாகிகள் அப்துல்லாஹ், சாகுல் ஹமீது மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் அவர்கள் இந்த ரமலானை சமூக நல்லிணகத்திற்க்கு எப்படி பயன்படுத்து என்று சிறப்பாக பேசினார். அவர் பேசி முடித்ததும் மாற்று மத சகோதரர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம். 04.06.17